இரண்டாவது நாளாக இரண்டாவது பதிவிடுவதென்பது எனக்கு சுத்தமாக பழக்கமில்லாத விஷயம் என்பது ஒரு பக்கம் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது!
இந்த வருடம் வேறு பருவ மழை பல வருடங்களுக்குப் பிறகு சரியாக ஜூன் 1ம் தேதி துவங்கியிருப்பது ஆட்சிமாற்றத்தின் காரணமாகத்தான் என்று அய்யம்பாளையத்தார் வேறு அடித்துக் கூறுகிறார்! எது எப்படியோ! கோவையில் மீண்டும் பழைய பருவநிலை வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி!
இந்த மழைக்காலத்தில் வீடு விட்டால் தியேட்டர், தியேட்டர் விட்டால் வீடு என்று நல்ல பிள்ளையாக நடந்து வரும் என்னை பதிவு போடுமாறு உசுப்பேற்றி விட்ட வேண்டப்பட்ட விரோதி கிங் விஸ்வாவைத் தான் கூற வேண்டும்!
இம்முறை நான் கண்டு ரசித்தது குங் ஃபூ பாண்டா2! சென்னையில் சென்ற வாரமே இந்தப் படம் ரிலீஸாகி விட்டாலும் கோவையில் இந்த வாரம்தான் ரிலீஸ்! அதுவும் 3Dல்! ஆனால் கனகதாரா தியேட்டரில் காலை 11 மணி காட்சி மட்டுமே! வார இறுதிகளில் சிறப்புக் காட்சி மாலை 4:30 மணிக்கு!
விமர்சனத்துக்குப் போகும் முன் சிறிது சரித்திரம்!
அனிமேஷன் படங்கள் என்றாலே வால்ட் டிஸ்னிதான் என்று பல வருடங்களுக்கு அத்துறையை ஆண்டு வந்தது அந்த நிறுவனம்! 2D, 3D என்று அனைத்து துறைகளிலும் போட்டிக்கு ஆளின்றி பல சூப்பர் ஹிட் திரைப்படங்களைத் தயாரித்து வந்தது அந்த நிறுவனம்! 90களின் இறுதியில் அவர்களுக்குப் போட்டியாக ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் தலைமையில் துவங்கியதுதான் ட்ரீம்வர்க்ஸ் நிறுவனம்!
ஏட்டிக்குப் போட்டியாக இரு நிறுவனங்களும் தொடர்ந்து படங்களை வழங்கி அனிமேஷன் பட ரசிகர்களுக்கு வயிறு முட்ட விருந்தளித்து வந்தாலும், சமீப காலம் வரை வால்ட் டிஸ்னியே முன்னிலையில் இருந்தது, ஷ்ரெக் வரிசைப் படங்கள் வரும் வரை!
பல வருடங்களாக வால்ட் டிஸ்னி படங்களை பார்த்து ரசித்தவன் என்ற முறையில் அவர்களது குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் ச்சோ-ச்வீட் வகைப் படங்கள் திகட்ட ஆரம்பித்திருந்தன! ஆனால் ஷ்ரெக் மற்றும் குங்ஃபூ பாண்டா போன்ற அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் டிஸ்னியை ட்ரீம்வர்க்ஸ் மிஞ்சி விட்டதென்றே நான் எண்ணுகிறேன்! இந்நிலையில் தான் குங்ஃபூ பாண்டா படத்தின் இரண்டாம் பாகம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்துள்ளது!
இது குறித்த மேலதிக விவரங்களுக்கு ஹாலிவுட் பாலாவின் அனிமேஷன் குறித்த தொடரைப் படிக்குமாறு பரிந்துரைக்கிறேன்!

கதை: வழக்கமான தமிழ் சினிமா கதையான குடும்பத்தை அழித்த வில்லனை பழி வாங்கும் கதைதான்! ஹிந்து பேப்பரில் வேலை செய்து, ஓசியில் சினிமா பார்க்கும், ஒலக சினிமாவை ரசிக்கும் போலி விமர்சகன் நான் இல்லை என்பதால் கதையில் ஆழம் இல்லை என்ற சிறு விஷயம் என்னை உறுத்தவில்லை!
வாய்ஸ் ஆக்டிங்: ஆஞ்சலினா ஜோலி, டஸ்டின் ஹாஃப்மேன், கேரி ஓல்ட்மேன், ஜாக்கி சான், செத் ரோகன், லூசி லியூ, மிஷேல் யோ, ஜான்...சாரி...ழான் க்ளாட் வாண்டேம் என பெரிய நட்சத்திர பட்டாளமேயிருந்தாலும் இவர்கள் அனைவருக்கும் துளியும் இடமளிக்காமல் தூக்கி சாப்பிடுகிறார் பாண்டாவுக்கு குரலளித்திருக்கும் ஜாக் ப்ளாக்! ஜாக்கி சான் இரண்டு படங்களிலும் சேர்த்து மொத்தம் 25 வரி வசனம் பேசியிருந்தால் பெரிய விஷயம்! ஜாக் ப்ளாக் ராக்ஸ்!
3D அல்லது முப்பரிமாணம்: படத்திற்கு 3D சிறப்பு சேர்க்கிறதென்பதே உண்மை! பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் 4 போல் 2Dல் எடுக்கப்பட்டு பின்னர் காசு பிடுங்கவதற்காக 3D மாற்றம் செய்யப்படவில்லை! படம் உருவாக்கப்பட்டதே 3Dல் தான் என்பதால் அதன் சிறப்புகள் முழுமையாக வெளிப்படுகின்றன! படத்தை கண்டிப்பாக 3Dல் பார்க்கவும்!
தியேட்டர் நோட்ஸ்: படம் பார்க்கும் ஆடியன்ஸிடமிருந்து செம ரெஸ்பான்ஸ்! குழந்தைகளுடன் வரும் பெற்றோரை விட இளசுகள் கூட்டமே அதிகம்! பாண்டா அடிக்கும் ஒவ்வொரு லூட்டிக்கும் க்ளாப்ஸ், விசில் சத்தம் தூள் பறந்தது ஆச்சரியமளித்தது! வசனங்களுக்கும் சிறப்பு அப்ளாஸ்!
சிறப்புக் காட்சி என்பதால் மதியக் காட்சிக்கும் சிறப்புக் காட்சிக்கும் பெரிதாக இடைவெளி விடாத காரணத்தாலும், ட்ரைலர்களை ஓட விட்டதால் படம் போட்டு விட்டதாக ரசிகர்கள் தவறாக நினைத்து விட்டதாலும் ஏகப்பட்ட தள்ளு முள்ளு! உள்ளே நுழைந்து உட்கார்ந்து படம் பார்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!

கண்டிப்பாக 3Dல் பார்க்க வேண்டிய படம்! 7 முதல் 77 வரை அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய படம்!
பயங்கரவாதியின் பன்ச்:
குங்ஃபூ பாண்டா!
மசாலா போண்டா!
(மழைக்கால மாலைநேரங்களில் சூடாக சுவைக்க!)
படத்தின் ட்ரைலர்:
9 comments:
தொடர்ந்து நல்ல படங்களாக பார்த்து வரும் உங்களை கண்டால் பொறாமையாக இருக்கிறது. அது என்னமோ தெரியவில்லை, நான் பார்க்கும் படங்கள் முக்கால்வாசி மொக்கையாகவே இருக்கிறது. (அல்லது மொக்கையாக இருக்கும் படங்களையே நான் பார்க்கிறேனோ?).
உங்களுடன் படத்தை பார்த்த அண்ணன் க'னாவை பற்றி ஏதுமே சொல்லவில்லையே? அண்ணன் க'னாவுடன் படங்களை பார்ப்பதே ஒரு அலாதி சுவைதான். நல்ல படங்கள் அவருடன் பார்க்கையில் மிகவும் நல்ல படங்களாகி விடுகிறது. இதைப்பற்றி நாம் ஒரு மழைக்கால மாலை நேரத்தில் விவாதிக்கலாம். ஓக்கேவா?
பகிர்வுக்கு நன்றி.. மழை பொழியட்டும்... வாழ்த்துக்கள்
என்னது ஆஞ்ச்லீனா ஜூலியா? அப்போ சீன் இருக்கா? ஹி ஹி
//என்னது ஆஞ்ச்லீனா ஜூலியா? அப்போ சீன் இருக்கா? ஹி ஹி//
பாஸ், நல்லா கவனியுங்க, அது வாய்ஸ் ஏக்டிங் மட்டும்தான். அதாவது அனிமேஷன் படத்தில் பின்னணி குரல் கொடுத்தவர்கள் தான்.
இந்தப் படத்தை நாங்கள் பார்க்கும் முன்னரே, முகுந்தா தியேட்டரை விட்டே எடுத்து விட்டனர் :-( . . இருந்தாலும் எப்படியாகிலும் பார்த்தே தீருவேன்.
நானும் பார்த்துட்டேன் தல.. படமும் 3D-ம் செம :)
இப்படம் என்னை மகிழவைக்கவில்லை.ஆனால் நெகிழ வைத்தது.குறிப்பாக இறுதிக்காட்சி.மயிலை வில்லனாக காட்டியவுடன் அதிர்ந்தே விட்டேன்.கனகதாராவில்தான் பார்த்தேன்.அனிமேசன் நேர்த்தி சூப்பர்.
கண்டிப்பா பார்க்கணும் ..தூண்டியது உங்க பதிவு
தலைவரே,
இன்று இப்படத்தைப் பார்த்தேன், அருமையாக இருந்தது. குறிப்பாக அனிமேஷன் தரம் வியக்க வைத்தது.
Post a Comment