ப்ரிய தோழமைக்கு, .
ஒரு அருமையான திரைப்படம் ஏற்படுத்தும் உணர்வானது நெடுநாள் பிரிந்த நல்ல சிநேகிதத்தை மீண்டும் சந்தித்தமைக்கு சமம் என்று பலரும் கூறுவார். அவ்வாறே இந்த வாரமும் திரைக்கு வரும் படங்களில் நல்ல சிநேகிதம் கிட்டுமா என்ற கேள்வியுடன் இந்த பதிவினை ஆரம்பிக்கிறேன்
பின்னே என்னங்க, ஏதோ நான் பெரிய இலக்கியவியாதி மாதிரி எழுதுவதாக எனக்கே சந்தேகம் வர, அதனால்தான் அந்த முதல் பத்தியை அடித்து விட்டு புதியதாக ஆரம்பிக்கிறேன் (அதே நான் ஒரு இலக்கியவியாதியாக இருந்தால் அந்த பத்தியை அடிக்காமல் அப்படியே ஆரம்பித்து இருப்பேன்). சென்ற வாரம் வந்த படங்களில் ஒன்று மொக்கை, இரண்டு சூப்பர். அதே போல இந்த வாரமும் ஏதாவது ஒரு நல்ல படம் வந்து நம்ம நேரத்தை நல்லபடியாக கழிக்க உதவுமா என்று பார்க்க இந்த பதிவு உங்களுக்கு உதவும்.
01 பாலாவின் அவன் இவன் : இந்த படம் நேரிடையாக தெலுகில் வாடு வீடு என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. பாலாவின் சென்ற படம் ஆந்திராவில் நல்லதொரு வரவேற்ப்பை பெற்றதாலும், பிதாமகன் அங்கு சூப்பர் ஹிட் என்பதாலும் இந்த முயற்சி. தமிழில் இந்த படம் ஓடாது என்று நண்பர் ஒருவர் என்னிடம் ஆயிரம் ருபாய் பந்தையம் கட்டியுள்ளார். அட்லீஸ்ட் அதற்காவது பாலாவின் இந்த படம் ஓடவேண்டும்.
02 மகா சக்திமான்: நம்ம தேனாண்டாள் பில்ம்ஸ் ஒரு படத்தை தமிழில் ரிலீஸ் செய்தாலே அது வெற்றியடையப்போகும் படம் என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் பரவலான பேச்சு உண்டு. அது உண்மையா என்பதை இந்த படம் வந்த பிறகே விவாதிக்க வேண்டும். முக்கியமான ஒரு விஷயம் என்னவெனில் வழக்கமான டப்பிங் பட உலக ரசிகர்களின் மஜா மன்றமாகிய பைலட் தியேட்டரில் இது ரிலீஸ் ஆகவில்லை. மோட்சம், கேசினோவில் ரிலீஸ் ஆகிறது.
Film Title | Green Lantern (மகா சக்திமான்) |
Director | Martin Campbell |
Star Cast | |
Genre | Super Hero |
Producer(s) | |
Music Director | James Newton Howard |
Language | English (மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழிலும், தெலுகிலும் ரிலீஸ் ஆகிறது) |
என்ன மேட்டர் படத்துல? | DC காமிக்ஸ் கதையில் இருந்து மற்றுமொரு சூப்பர் ஹீரோ கதை. ஒரு பச்சை விளக்கு. ஒரு மோதிரம். அந்த மோதிரத்தை ஒவ்வொரு நாளும் விளக்கில் சார்ஜ் செய்ய வேண்டும். அந்த மோதிரம் சூப்பர் ஹீரோ ஆகும் அனைத்து சக்திகளையும் கொண்டது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹால் ஜோர்டானிடம் அந்த மோதிரம் வந்தடைகிறது. உலகை அவரால் காப்பாற்ற முடியுமா? இந்த படத்தை காப்பாற்ற இயக்குனரால் முடியுமா? |
03 பேஜா ப்ரை 2: முதல் பகுதி சூப்பர் டூப்பர் ஹிட். ஹிந்தி சினிமாவில், ஏன் இந்திய சினிமாக்களில் மல்டிப்ளெக்ஸ் படங்களுக்கு மறுவாழ்வு கொடுத்த படம் அது. அந்த படம் வந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அதன் இரண்டாம் பாகம் வருகிறது. அந்த முதல் பகுதியின் தரத்தில் பாதி இருந்தாலே படம் ஓடும். இது எப்படியோ?
Film Title | பேஜா ப்ரை 2 |
Director | Sagar Ballary |
Star Cast | Vinay Pathak, Kay Kay Menon, Minisha Lamba, Suresh Menon & Amol Gupte |
Genre | காமெடி (குறிப்பாக பிளாக் ஹியூமர்) |
Producer(s) | Mukul Deora |
Music Director | Ishq Bector, Sneha Khanwalkar & Sagar Desai |
Language | ஹிந்தி |
என்ன மேட்டர் படத்துல? | இந்த முறை நம்ம கதாநாயகன் வினய் பாதக் கப்பலில் தன்னுடைய அட்டகாசத்தை தொடருகிறார். கப்பலில் அவரிடம் மாட்டிக்கொண்டு முழிப்பது கே கே மேனன் (யமகாதக நடிகர் இவர்). அதுவுமில்லாமல் ஒரு R.D பர்மன் இசை ரசிகர் வேறு வந்து குழப்பத்தில் கல்லா கட்டுகிறார் (அமோல் குப்தே). மொத்தத்தில் இன்னுமொரு கலாட்டா படம் ரெடி. |
04 தி ரெசிடென்ட்: கூடவே ஈவில் சேர்த்து இருந்தால் படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆக ஓடும் என்று நண்பர் கமென்ட் அடிக்கிறார். பின்னே? ஹிலரி ஸ்வான்க் இரண்டு முறை ஆஸ்கர் விருது வாங்கிய நடிகையாக இருந்தாலும், நம்ம ஆட்கள் எப்போது ஹீரோயினுக்காக படத்தை பார்த்து இருக்கிறார்கள்? சிம்ரனே ஜோடி இல்லாமல் நடித்தாலும் படம் ஓடாது என்று அண்ணன் யூனா அடிக்கடி சொல்வார்.இந்த படமும் பெரிய எதிபார்ப்பு இல்லாமல் வருகிறது. பார்க்கலாம்.
Film Title | The Resident |
Director | Antti Jokinen |
Star Cast | |
Genre | Thriller |
Producer(s) | Simon Oakes |
Music Director | |
Language | English |
என்ன மேட்டர் படத்துல? | நம்ம ஹீரோயின் ஒரு மருத்துவர். வீடு வாடகைக்கு தேடும்போது ஒரு வீட்டை பார்த்து பிடித்து போக, அங்கு குடி போகிறார். ஆனால் அங்கே அவர் தனியாகத்தான் இருக்கிறாரா? வீட்டு ஓனர் (இவர் பார்க்க நம்ம ஜார்ஜ் க்லூனிக்கு கருப்பு தாடி வச்ச மாதிரி இருப்பதாக அவரே சொல்லி இருப்பார்) பார்க்க நல்லவராக இருந்தாலும் அவருள்ளே மறைந்து இருக்கும் மர்மம் என்ன? திடு திடுக்க வைக்கும் திருப்பங்களுடன் திக், திக் சம்பவங்கள் நிறைந்த படம் (என்று விளம்பரம் செய்துள்ளார்கள்). |
நாளைக்கு அவன் இவன் மற்றும் மகா சக்திமான் விமர்சனங்களுடன் சந்திக்கலாம்.
3 comments:
வந்தோம்ல பஸ்ட்
மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அநாகரீகம் படத்தை நாகரீகம் கருதி இங்கே சொல்லவில்லையா?
இதைதவிர மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "பிந்தி பாஜார்" மற்றும் "ஆல்வேஸ் கபி கபி" போன்ற இரண்டு ஹிந்தி படங்களும் ரிலீஸ் ஆகிறது. இதில் ஆல்வேஸ் கபி கபி வுட்லேண்ட்ஸ் தியேட்டரில் ஓடுகிறது.
Post a Comment