Recent Posts

Tuesday, June 7, 2011

ரெடி-2011-ஹிந்திப்படம்

சல்மான் கானின் தீன்க சிக்கா, தீன்க சிக்கா, தீன்க சிக்கா, தீன்க சிக்கா,ஹொய், ஹொய், ஹொய், ஹோய்

இந்த வருடத்தின் மிகப்பெரிய முதல் இந்தியப்படம் ரிலீஸ் ஆகிவிட்டது. இன்னும் பல காத்திருக்கின்றன. என்ன, ராணா பற்றி ஏதாவது பேசுகிறேனோ என்று நினைப்பவர்கள் எல்லாம் ஒரு ஸ்டெப் பேக். நான் சொல்வது ஜனங்களின் ஸ்வீட்ஹார்ட் சல்மான் கானின் லேட்டஸ்ட் படமாகிய ரெடி பற்றி. 23 வருடங்களாக நடித்துக்கொண்டு இருந்தாலும்கூட சமீபத்தில்தான் நம்ம சூப்பர் ஸ்டாரின் பாணியை பின்பற்ற ஆரம்பித்து இருக்கும் சல்மானுக்கு தபங் படத்திற்கு பிறகு மற்றுமொரு மகத்தான வெற்றி(யை தரப்போகும்)  படமே இந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆன ரெடி. இந்த படத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னாள் கொஞ்சம் கொசுவத்தி கலந்த ஹிஸ்டரி.

ஒரு சின்ன பிளாஷ்பேக்: கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்கு முன்பாக தெலுகு இயக்குனர் சீனு வைட்லாவின் இயக்கத்தில் ராம், ஜெனிலியாவின் நடிப்பில் வந்து சக்கை போடு போட்ட சூப்பர் ஹிட் படம் ரெடி. இந்த படத்தை உடனடியாக அடுத்த வருடமே கன்னடத்தில் புனீத் ராஜ்குமாரை ஹீரோவாக்கி எடுத்தார்கள் (ஒரு நாள் பெங்களுருவில் நம்ம ப்ரியாமணியின் போஸ்டரைக்கண்டு நண்பரிடம் விசாரிக்க, அவர் நம்மை படத்துக்கே அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார், அதுதான் இந்த படம்) . அந்த படமும் வெள்ளிவிழா கண்டு சூப்பர் ஹிட் ஆகி விட்டது. அதற்க்கு அடுத்த வருடம் அந்த படத்தை தமிழில் எடுத்து சரிந்திருந்த தனுஷ் மார்கெட்டை தூக்கி நிறுத்தினார் மித்திரன் R ஜவஹர். தெலுகில் ரெடி என்று வந்தது கன்னடாவில் ராம் என்று ஆனதுபோல தமிழில் இது உத்தமபுத்திரன் என்று பெயர் மாற்றப்பட்டது. இப்போது இந்த ரெடி படமே ஹிந்தியில் ரிமேக்கப்பட்டு இருக்கிறது. தமிழில் நான் உத்தமபுத்திரன் படம் பார்த்துவிட்டேன். காமெடி காட்சிகளை டிவியிலே பார்த்துகொள்கிறேன் என்று சொல்பவர்கள் மறுபடியும் ஒரு முறை யோசியுங்கள். இது தெலுகு, கன்னட மற்றும் தமிழ் படங்களை விட சிறப்பாக வந்துள்ளது.

என்னை எங்க அப்பா சின்ன வயசுல இலக்கியவாதியாக படிக்க வைக்காததால், நான் வெகுஜன ரசனையோடு வளர்ந்துவிட்டேன். ஆகையால் ஒரு படத்தை இப்படிதான் பார்க்கவேண்டும், படங்களின் காட்சிகள் இடையே இருக்கும் குறியீட்டை இப்படிதான் புரிந்துகொள்ள வேண்டும் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆகையால் அறிவுஜீவிகள் இந்த படத்திற்கு செல்லவேண்டாமென்று சொல்வதோடில்லாமல் இரண்டரை மணி நேரம் டைம் பாஸ் செய்ய நினைப்பவர்கள் அனைவருமே கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் இந்த ரெடி என்றும் சொல்வேன்.

கதை: இந்த கதை என்கிற வஸ்து இந்த படத்தில் இருக்குமா என்று முந்தைய பத்தியை படித்துவிட்டு சந்தேகப்படும் நண்பர்கள் பயப்பட வேண்டாம். எண்பதுகளில் வந்த இரண்டு குடும்பங்களை சேர்த்து வைத்து காதலியை கைப்பிடிக்கும் ஹீரோவின் கதையே ரெடி. என்னடா முப்பது வருடதிற்ற்கு முந்தைய கதையை கொண்டுள்ள படத்தை கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று சொல்கிறானே என்று நினைக்கவேண்டாம். படத்தின் சிறப்பு அம்சங்களாக காமெடி காட்சிகளும், சிரிப்பை வரவழைக்கும் வசனங்களும், மிகச்சிறப்பான பாடல்களும் இருந்தாலும் மூன்று விஷயங்களே படத்தை பார்க்க தூண்டுகிறது: சல்மான் கானின் I, ME & MYSELF. சுருங்க சொல்வதாயின் இது ஒரு சல்மான் கான் படம். வேறு எதையும் எதிர்பார்த்து செல்லாதீர்கள். சல்மானின்ரி வேறில்லை இந்த ரெடியில்.

நடிப்பு: சல்மான் கானைப்பற்றி சொல்லவே தேவை இல்லை. மனுஷன் அசத்தி விட்டார். இந்த படத்தில் காமெடி விஸ்வரூபம் எடுத்துள்ளார் சல்மான். அசின் பல இடங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும் சில இடங்களில் சுமாரே. ஆனால் அதை ஈடுகட்டும் விதத்தில் கர்சீப்பை விட சின்ன வெள்ளைக்கலர் ஸ்கர்ட்'டில் செமையான குத்தாட்டம் போட்டு 'திறமையை' வெளிப்படுத்தியுள்ளார்.  ஹிந்தியின் மிகச்சிறந்த குணசித்திர நடிகராக (நான் கருதும்) பரேஷ் ராவல் இந்த படத்தில் சிக்சர் மேல் சிக்சர் அடித்துள்ளார். ஆனால் காமெடியில் அனைவரையும் மிஞ்சுபவர் சிறிதே அறிமுகம் ஆன சுதேஷ் லேஹ்ரி. அவருக்கு ஒரு ஓ போடுவோம்.

இதையும் தாண்டி படத்தில் சல்மானின் தந்தையாக வரும் இயக்குனர் மகேஷ் மான்ஜ்ரேகர், அங்கிள்களாக வரும் மனோஜ் ஜோஷி மற்றும் மனோஜ் பக்வா, வில்லன்களாக வரும் சரத் சக்சேனா, அகிலேந்திர மிஸ்ரா, அவர்களின் தந்தையாக வரும் புனீத் இஸார் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. 

இயக்குனர் அனீஸ் பாஸ்மி என்றாலே நட்சத்திரங்களின் கூட்டம் இருக்கும் என்று ஹிந்தியில் சொல்வார்கள்.அதை நிரூபிக்கும் வகையில் இந்த படத்திலும் பலர் மரியாதி நிமித்தம் தலையை காட்டியுள்ளார்கள். அஜய் தேவ்கன், சஞ்சய் தத், அர்பாஸ் கான், சங்கி பாண்டே, கங்கனா ருனாவட், ஜரின் கான் என்று பலர் கெஸ்ட் ரோலில் வந்து நம்ம அய்யம்பாளையத்தார் போல 'உள்ளேன் ஐயா' என்று அட்டென்டன்ஸ் இட்டு உள்ளார்கள்.

பாடல்கள்: நம்ம யூனா மாதிரி படம் ஆரம்பிக்கும் முன்னாடியே சென்று விடுங்கள். அப்போதுதான் ஆரம்பத்திலேயே வரும் சூப்பர் ஹிட் பாடல் 'கேரக்டர் டீலா' பாடலை ரசிக்க முடியும். அதைப்போலவே படம் முடிந்தவுடனேயே கிளம்பி விடாதீர்கள். தீன்க சிக்கா ரீமிக்ஸ் பாடல் படம் முடிந்தவுடன் வருகிறது (அசின் இன் ரெட் ஸ்கர்ட்). தெலுகில் சென்ற ஆண்டு வந்த ஆர்யா படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்தீர்களா? அதில் வந்த ரிங்க ரிங்கா பாடலைதான் ஹிந்தியில் தீன்க சிக்கா என்று மாற்றியுள்ளார்கள். அந்த பாடலும், அதற்க்கு சல்மான் + அசினின் குத்தாட்டமும், அதனை படமாக்கிய விதமும் சூப்பர். மொத்தத்தில் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலாக வருவதற்கு பிரகாசமான வாய்ப்புகளை பெற்றுள்ளது இந்த தீன்க சிக்கா பாடல்.

தியேட்டர் நோட்ஸ்: படம் பார்க்கும் ஆடியன்ஸிடமிருந்து செம ரெஸ்பான்ஸ்! குறிப்பாக சல்மான் கானின் ஒவ்வொரு வசனத்திற்கும் ஏகப்பட்ட கைதட்டல்கள். அதிலும் கிளைமேக்சில் சல்மான் சட்டையை கழட்டி தன்னுடைய கட்டுடலை காட்டும் அந்த காட்சியில் பெண்களே கத்தி ஆரவாரம் செய்கிறார்கள் (விட்டால் விசில் கூட அடிப்பார்கள் போல) அதிலும் அந்த காட்சியில் அசினின் முக பாவங்களும் அந்த வசனமும் அற்புதம் (கோயி தொ ரோகோ). இந்த படத்திற்கு ரிபீட் ஆடியன்ஸ் கண்டிப்பாக இருப்பார்கள்.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: bullets 5/6. ஐந்து தோட்டாக்கள்.

imageஒரு கட்டை விரல் மேலே. 

கிங்'ஸ் பன்ச்: ரெடி, கோடை கடுமைக்கு மழை தந்த இடி.

9 comments:

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நல்ல விமர்சனம் நண்பா,இத்தனை டீடெய்லா எழுதியது வியப்பு.தொடர்க

King Viswa said...

இன்னும் நெறைய டீடெயில் இருக்கு. ஆனால் ஏற்கனவே நம்முடைய மைதானம் பதிவு ரொம்ப நீளம் என்று கண்டனங்கள் வந்ததால் அவற்றை குறைத்துக்கொண்டேன்.

By the way, படம் ஒரு அக்மார்க் காமெடி. டோட்டல் டைம்பாஸ். அதிலும் பரேஷ் ராவல் கலக்கி விட்டார்.

சி.பி.செந்தில்குமார் said...

>>என்னை எங்க அப்பா சின்ன வயசுல இலக்கியவாதியாக படிக்க வைக்காததால், நான் வெகுஜன ரசனையோடு வளர்ந்துவிட்டேன். ஆகையால் ஒரு படத்தை இப்படிதான் பார்க்கவேண்டும், படங்களின் காட்சிகள் இடையே இருக்கும் குறியீட்டை இப்படிதான் புரிந்துகொள்ள வேண்டும் என்பதெல்லாம் எனக்கு தெரியாது.

தன்னடக்க தம்பி? ஹ ஹா

Cibiசிபி said...

வாவ் தமிழ் காமிக்ஸ் உலகம் போல தமிழ் சினிமா உலகம்

கருப்பு வெள்ளை திரைப்பட சமூகம் என்று போட்டுவிட்டு

கலர்படங்கள் பற்றி ..........................

ஹி ஹி ஹி :))
.

Cibiசிபி said...

// தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 5/6. ஐந்து தோட்டாக்கள். //

பயங்கரவாதி கைவசம் ஏகப்பட்ட தோட்டாக்கள் இருக்கும்போல தெரிகிறதே ;-)
.

Cibiசிபி said...

// கெஸ்ட் ரோலில் வந்து நம்ம அய்யம்பாளையத்தார் போல 'உள்ளேன் ஐயா' என்று அட்டென்டன்ஸ் இட்டு உள்ளார்கள். //

என்ன கொடும சார் இது

இதை வன்மையாக கண்டித்து கோவையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்
.

Anonymous said...

தமிழில் ஹிட்டா? ஹே!!!
இதிலிருந்தே தெரிகிறது, இந்த படம் எப்படி இருக்கும் என்று?

கோவை கவிநேசன் said...

ஐய்யா...
ஹீரோ காட்னா ‘திறமை’ அதுவே ஹீரொயின் காட்னா ’தெறமை’ என்று தெளிவாக எடுத்துரைத்து சமுதாய கடமையை சிறப்புற ஆற்றி எங்கள் அறிவு கண்களை திறந்த கிங்’கார்... வாழ்க..

sharf said...

kandippa padam paakanum nanaba

Post a Comment