Saturday, June 25, 2011

நூற்றென்பது (180) : 25th JUNE, 2011 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

1989ல் இதயத்தை திருடாதே என்றொரு படம் வந்தது! ஹீரோவுக்கு கான்சர்! ஹீரோயினுக்கு இதயத்தில் ஓட்டை! ஆனால் படத்தில் புதுமை என்னவென்றால் வழக்கம் போல சோகத்தை பிழியாமல் இருக்கும் வரை சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியதேயாகும்!

புதுமையான மாற்றுக் கருத்தை வெளிப்படுத்திய இப்படம் தெலுங்கு டப்பிங் என்றாலும் தமிழிலும் சூப்பர் டூப்பர் ஹிட்! ஒலக சினிமா எடுக்காத அந்த கால மணிரத்னம், எவர்க்ரீன் இசைஞானி இளையராஜா, இருட்டிலும் தெளிவாக படம்பிடித்த பி.சி.ஸ்ரீராம் என்ற அற்புதமான கூட்டணி எப்போதும் சோடை போனதேயில்லை!

இன்று ரிலீஸாகியுள்ள 180 படமும் இதே கருத்தை முன்வைக்க முயல்கிறது! ஆனால்...?!!

கதை: ஹீரோ சித்தார்த்துக்கு கனையத்தில் கான்சர் (தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஹீரோவுக்கு இங்கு கான்சர் வருகிறது)! ஆறு மாதத்தில் (180 நாட்கள் - படத்தின் டைட்டில்) அவர் இறந்து விடுவாராம் (இந்த கால அவகாசத்தை மாத்தவே மாட்டாங்களா?!!) ஆகையால் அவர் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாமல் தன் கடைசி காலத்தை தனிமையில் சந்தோஷமாக கழிக்க விரும்புகிறார்!

ஆனால் படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திலேயே 180 நாட்கள் முடிந்தும் உயிரோடு இருந்து நம்மையெல்லாம் படுத்துகிறார்! நடுவில் இரண்டு ஹீரோயின்களுடன் டூயட் பாடுகிறார்! சமூக சேவையெல்லாம் வேறு செய்கிறார்! க்ளைமாக்ஸ் எப்போதுதான் வருமென்று நம் பொறுமையையும் சோதிக்கிறார்! 

கடைசியில் சித்தார்த் பிரேசிலுக்கு செல்வது போலெல்லாம் காட்டி 180 - பாகம் 2 வரும் என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள்!

நடிப்பு: சித்தார்த் வழக்கம் போல வந்து போகிறார்! 2 ஹீரோயின்கள்! நித்யா மேனன், ப்ரியா ஆனந்த்! நித்யா சேச்சி ஓடி வரும் போதெல்லாம் அவரோடு சேர்ந்து தியேட்டரும் குலுங்குகிறது! ப்ரியாவை சித்தார்த் அவ்வப்போது மவுத் கிஸ் அடித்து சூட்டைக் கிளப்புகிறார்! இது ஒரு BI-LINGUAL படம் என்பதால் தமிழ் மெளலியும், தெலுங்கு தணிகெல்லா பரணியும் வருகிறார்கள்!

இசை: பாடல்கள் எதுவும் காதிலும், மனதிலும் பதியவில்லை என்பது பெரும் குறை! பலகீனமான கதை/திரைக்கதைக்கு பலம் சேர்க்க வேண்டிய இசை சொதப்பினால் படம் படுத்து விடாதோ?!! எங்கேயும் காதல் படம் பல இடங்களில் படு மொக்கையென்றாலும் பாடல்கள் மூலம் அந்த குறை நிவர்த்தி செய்யப்பட்டது நினைவிருக்கலாம்!

ஒளிப்பதிவு: படத்தின் ஹை-லைட் இதுதான்! ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் சூப்பர் ஸ்லோ-மோஷன் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார்! அழகிய தமிழ் மகன் படத்தில் இளைய தளபதி மருத்துவர் விஜய்யை அவ்வளவு அழகாக காட்டியவராயிற்றே! சோடை போவாரா?!!

தியேட்டர் டைம்ஸ்:
  • படம் பார்த்த அனைவரும் இரண்டாம் பாதியில் மொக்கை தாள முடியாமல் கதறிக் கொண்டிருக்க அண்ணன் ‘க’னா அவர்கள் மட்டும் சில பல குறியீடுகளைக் கண்டு பிடித்துக் கூறி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது கொடுமையிலும் கொடுமை!
  • படத்தில் நித்யா மேனன் சித்தார்த்தை படத்துக்கு போகலாம் என்று அழைக்கும் போது “தயவு செய்து 180க்கு மட்டும் போயிடாதீங்க!” என்ற கூக்குரல் அண்ணன் ‘க’னாவிடமிருந்து எழுந்தது!
  • படத்தை தயாரித்தது சத்யம் நிறுவனம் என்ற போதிலும் இதுவரை அவர்கள் ப்ரிவியூ ஷோ எதுவும் போடவில்லை! இன்று மாலை ராயப்பேட்டை ரியல் இமேஜில் ஸ்பெஷல் ஷோ மட்டும் இருந்தது! படம் மொக்கைன்னு அவங்களுக்கு முன்னமே தெரிஞ்சிருக்குமோ?!!
நிறைகள்: 
  • ஒளிப்பதிவு!
குறைகள்: 
  • வழக்கமான கதை! மொக்கைத் திரைக்கதை! ஆமை வேகத்தில் நகரும் இரண்டாம் பாகம்!
  • இசை!
  • ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ரசனைகளை மட்டுமே திருப்திப் படுத்தும் வகையில் அமைந்திருக்கும் முதல் பாதி காட்சிகள்!
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

1/6 - ஒரே ஒரு தோட்டா!

பயங்கரவாதியின் பன்ச்: 180 - 180 ரூவா போச்சே!

ட்ரைலர்:

5 comments:

Lucky Limat - லக்கி லிமட் said...

வந்தோம்ல பஸ்ட்

Lucky Limat - லக்கி லிமட் said...

நல்லவேலை என் நண்பன் படத்திற்கு ரிசர்வ் பண்ண சொன்னான். Cars 2 வந்ததால் தப்பித்தேன்

King Viswa said...

//கனையத்தில் கான்சர் (தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஹீரோவுக்கு இங்கு கான்சர் வருகிறது)! ஆறு மாதத்தில் (180 நாட்கள் - படத்தின் டைட்டில்)//

மன்னிக்க வேண்டும் யூவர் ஹைனஸ். ஏற்கனவே இந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆன பிள்ளையார் தெரு கடைசி வீடு படத்தில் ஹீரோயினுக்கு இதே போன்று கேன்சர் இருப்பதாக டாக்டர் பிரகாஷ்ராஜ் சொல்வார். ஆகையால் இது எப்படிங்க முதல் முறை?

Butter_cutter said...

ஆக மொத்தம் இது180அல்ல 108 அப்படீன்னு சொல்லறீங்க

Unknown said...

"அன்பு நண்பரே உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி

Post a Comment