சென்ற வாரத்தை கம்பேர் செய்து பார்க்கும்போது இந்த வாரம் கொஞ்சம் பரவாயில்லைதான். ஏனென்றால் மொத்தம் மூன்று தமிழ் படங்களும் ஒரு தெலுகு படமும் ரிலீஸ் ஆகிறது. சமீப காலமாக இருந்த ஒரு வித தேக்க நிலை மாறி, படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆவது பட ரசிகர்களுக்கும் தியட்டர் உரிமையாளர்களுக்கும், ஏன் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கே நல்லது. இந்த டிரென்ட் தொடரும் என்ற நம்பிக்கையில் இந்த வாரம் வரப்போகும் படங்களை பற்றிய முன்னோட்டப்பதிவிற்கு செல்வோம்.
01 அருள்நிதி நடிக்கும் உதயன்; படத்தின் இயக்குனராகிய சாப்ளின் தரணி, கரு பழனியப்பன் மற்றும் பாண்டிராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பாண்டிராஜின் வம்சம் படத்தில் பணி புரியும்போது அருள்நிதியிடம் சொன்ன கதையே இந்த உதயன். இந்த படத்தின் தயாரிப்பாளரை குறித்து சமீபத்தில் கிளம்பிய சர்ச்சை இன்னமும் அடங்கவில்லை. பொங்கல் அன்று பூஜை போடப்பட்ட இந்த படம் மிகவும் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. த்ரில்லர் வகையை சேர்ந்த படம் இது என்று இயக்குனரே கூறும்போது நாமென்ன மறுக்கவா போகிறோம்?
இயக்குனர் : சாப்ளின் (முதல் படம்)
நடிகர்கள் : அருள் நிதி (இரட்டை வேடங்களில்), பிரனீதா (தமிழில் அறிமுகம்)
ஒளி ஓவியர் : விஜய் மில்டன்
இசையமைப்பாளர் : மணிகண்டன் கதிரி (முதல் படம்-கதிரி கோபால்நாத் புதல்வர்)
தயாரிப்பாளர் : பிரபாகரன்
மொழி : தமிழ்
என்ன மேட்டர் படத்துல:முதல் முறையாக அருள்நிதி இரட்டை வேடங்களில் நடிக்கிறார் (கொய்யால, நடிச்சதே ஒரே ஒரு படம்; ரெண்டாவது படத்துல டபுள் ஏக்டிங் என்று சொல்வதை விட்டு விட்டு இப்படியா என்று கேட்கவேண்டாம்). வழக்கம்போல எல்லா ஹீரோக்களும் சொல்வதையே இவரும் சொல்கிறார்:இரண்டு பாத்திரங்களுக்கும் இடையே வித்தியாசம் காட்டியுள்ளேன் என்று. ஹீரோயின் ஒரு அழகு பதுமை. இவர் இந்த ஆண்டு வெளிவந்த சித்தார்த்தின் தெலுகு படத்தில் நடித்து மனதை கொள்ளை கொண்டவர். செம கியூட்டான இந்த ஹீரோயினை ஒரு கன்னட பட பாடலில் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி தமிழில் புக் செய்துள்ளனர். நடிக்க வருகிறதா என்று பார்க்கவேண்டும்.
02 ஜித்தன் ரமேஷின் பிள்ளையார் தெரு கடைசி வீடு: கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து ஜித்தன் ரமேஷ் நடித்து வரும் முதல் படம் இது. நடிக்க வந்த முதல் இரண்டு ஆண்டுகளிலேயே ஆறு படங்களில் நடித்தவர், புலி வருது படத்திற்கு பின்பு காணாமலே போய்விட்டார். படத்தின் இயக்குனர் 'திருமலை' கிஷோர். ஆந்திராவின் வெற்றிகரமான எழுத்தாளர் பி.வி.எஸ்.ரவியிடமிருந்து தமிழுக்கு முதல் முறையாக இயக்க வந்திருக்கும் இவருக்கும் விஜய் நடித்த திருமலை படத்திற்கும் சம்பந்தம் இல்லை. திருப்பதி இவரின் சொந்த ஊர். பெருமாளிடம் "முதல் படம் புக் ஆனால் உன் பெயரையே எனக்கு முன்னாள் வைத்துக்கொள்வேன்" என்று வேண்டிக்கொண்டதால் இப்படி.
இயக்குனர் : 'திருமலை' கிஷோர் (முதல் படம்)
நடிகர்கள் : ஜித்தன் ரமேஷ், சஞ்சிதா படுகோனே, சுகாசினி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ்
ஒளி ஓவியர் : பன்னீர்செல்வம்
இசையமைப்பாளர் : சக்ரி (முதல் படம்)
தயாரிப்பாளர் : சூப்பர் குட பில்ம்ஸ் R.B.சவுத்ரி
மொழி : தமிழ்
என்ன மேட்டர் படத்துல: விஜய டி.ராஜேந்தரின் பரம ரசிகனாக வரும் ரமேஷ், தங்கி இருக்கும் இடமே பிள்ளையார் தெரு கடைசி வீடு. தனக்கு மிகவும் பிடித்தமான சொர்க்கம் போன்ற அந்த வீட்டை, வீட்டில் உள்ளவர்களை காதலுக்காக பிரிந்து வாழுகிறார். அதன் பின்னணியை லிட்டர் லிட்டராக கண்ணீரை கொண்டு சொல்லும் கதையே இந்த படம். தன்னை அனைவரும் கிண்டல் செய்வதாக நினைக்கும் விஜய டி ராஜேந்தர், மிகுந்த கெடுபிடிக்கு பிறகே அவரது பெயரை உபயோகிக்க சம்மதித்தார். கடைசியில் படம் பார்த்தவர், ரமேஷ் கட்டிபிடித்து பாரட்டியதோடில்லாமல் தன்னுடைய அடுத்த படத்தில் ரமேஷையே ஹீரோவாக நடிக்கவும் வைத்துள்ளார். கிளைமேக்சில் ரமேஷ் 'உண்மையிலேயே' நடித்துள்ளதாக கோடம்பாக்கத்து பட்சி ஒன்று சொல்கிறது. பார்க்கலாம்.
03 சித்தார்த்தின் 180 நூற்றெண்பது: கடைசியாக சித்தார்த் நடித்து வந்த படம் நினைவிருக்கிறதா? ஏழு வருடங்களுக்கு முன்பு வந்த ஆயுத எழுத்து என்ற மொக்கை படமே அது. அதன் பிறகு இப்போதுதான் தமிழில் வருகிறார். அதுவும் இந்த படம் ஒரு இரு மொழி படம் (தமிழ் மற்றும் தெலுகு) என்பதாலேயே இந்த வருகை. இந்த படத்தை இயக்குபவர் பிரபல விளம்பர பட இயக்குனராகிய ஜெயேந்திரா. சுபாவுடன் இவரே கதையையும் எழுதி இருக்கிறார். சத்யம் சினிமாஸ் தயாரிக்கும் படம் என்பதால் விளம்பரங்கள் கலை கட்டுகிறது. முதலில் 180 என்று எண்ணால் மட்டுமே இருந்த படத்தின் தலைப்பு இந்த வாரம் நூற்றெண்பது என்று மாற்றப்பட்டு உள்ளது. ஆனால் தெலுகில் 180 என்றுதான் ரிலீஸ் ஆகிறது.
இயக்குனர் : ஜெயேந்திரா (முதல் படம்)
நடிகர்கள் : சித்தார்த், நித்யா மேனன், ப்ரியா ஆனந்த், மவுலி
ஒளி ஓவியர் : நம்ம பாலசுப்ரமணியம் (ரெட் ஒன் கேமராவுடன்)
இசையமைப்பாளர் : மலையாள இசையமைப்பாளர் ஷரீத் (ஜூன் R பட இசையமைப்பாளர்)
தயாரிப்பாளர் : சத்யம் சினிமாஸ்
மொழி : கிட்டத்தட்ட தமிழ் & தெலுகு
என்ன மேட்டர் படத்துல: அடுத்த நூற்றெண்பது நாட்களில் இறந்துவிடுவோம் என்பதை தெரிந்துகொண்டு தன்னுடைய வாழ்க்கையில் அனைத்தையும் ரசிக்க ஆசைப்படும் ஒரு இளைஞனின் கதையே (ஐயையோ, அந்த 'இளைஞன்' இல்லீங்கோவ்) இந்த நூற்றெண்பது. இந்த படம் தமிழில் ஓடவே ஓடாது என்று (வழக்கம்போல) என்னுடைய நண்பரொருவர் என்னிடம் பந்தையம் கட்டியுள்ளார். பார்க்கலாம், இந்தமுறையாவது நான் ஜெயிக்கிறேனா என்று.
04 தெலுகு நகரம் நித்ர போதுன்ன வேல (நகரமே தூங்கும்போது): கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து ரிலீஸ் ஆகும் தெலுகு படம். மார்கெட் அவுட் ஆன சார்மியும், இழந்த நட்சத்திர அந்தஸ்தை பிடிக்க போராடும் ஜகபதி பாபுவும் ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தின் டிரைலரை பார்க்கும்போது ஒரு த்ரில்லர் படம் மாதிரியே தெரியவில்லை. ஏதோ தாதாகிரி படம் போலுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் பிரேம் ராஜ் அவர்களை ஜகபதி பாபு மிகவும் நம்புகிறார். தினசரியில் கொடுத்துள்ள விளம்பரத்தில் படத்தின் பெயரில் எழுத்துப்பிழை இருப்பதை திருத்தக்கூட நேரமில்லை வுட்லண்ட்ஸ் தியேட்டர் நிர்வாகத்தினருக்கு.
இயக்குனர் : பிரேம் ராஜ்
நடிகர்கள் : ஜகபதி பாபு, சார்மி, ஷாயாஜி ஷிண்டே,MS நாராயணா, பாபு மோகன்
இசையமைப்பாளர் : யஷோ கிருஷ்ணா (யுவக்ருஷ்ணாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லீங்கோவ்)
தயாரிப்பாளர் : நந்தி ரெட்டி
மொழி : சுந்தர தெலுங்கு
என்ன மேட்டர் படத்துல: படத்தில் சார்மி பத்திரிக்கை ரிபோர்டராக வருகிறார். படத்தின் முக்கால்வாசி பகுதிகள் இரவிலேயே ஷூட்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. படத்தின் முக்கியமான விஷயம் என்ன என்று விசாரித்தால் தயாரிப்பாளர் கதையையோ, நடிப்பையோ சொல்லாமல் படத்தில் சார்மி ஜகபதி பாபுவுக்கு கொடுத்த ஒரு முழுநீலநீள லிப் டு லிப் முத்தத்தையே சொல்கிறார். அதை நம்பியே எங்கள் குரூப்பில் பலரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
05 ஹிந்தி காமெடி படம் டபுள் தமால்: தொண்ணூறுகளில் தில், பேடா, இஷ்க் என்று தொடர்ந்து இளவயது ரசிகர்களுக்கு வெள்ளிவிழா படங்களாக வழங்கியவர் இந்திர குமார். ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் அவர் இயக்கிய படங்கள் எதுவுமே ஹிட் ஆகவில்லை. ஓரளவுக்கு சுமாராக போன படமே தமால். நான்கு வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வந்திருக்கிறார் இந்திர குமார். இந்த படமாவது அவருக்கு கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக தேடிக்கொண்டு இருக்கும் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்து அவருக்கும் ஆமிர் கானுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பை போக்க உதவுகிறதா என்று பார்க்கலாம்.
இயக்குனர் : இந்திர குமார்
நடிகர்கள் : சஞ்சய் தத், அர்ஷத் வார்சி, ரிதேஷ் ஜெனிலியா தேஷ்முக், மல்லிகா ஷெராவத், கங்கனா ருனாவட்ஒளி ஓவியர் : அசீம் பஜாஜ்
இசையமைப்பாளர் : ஆனந்த் ராஜ் ஆனந்த் (பாடல்கள் மற்றும் இசை)
தயாரிப்பாளர் : அசோக் தாகேரியா
மொழி : திராவிடர்கள் எதிர்த்த ஹிந்தி
என்ன மேட்டர் படத்துல: இந்த முறை பெரும் பணக்காரர் ஆன சஞ்சய் தத்திடம் இருந்து பணத்தை பறிக்க முயல்கிறார்கள் நம் விசித்திர நால்வர் குழு. அதில் இருந்து சஞ்சய் தத் எப்படி தப்பிக்கிறார் என்பதே நகைச்சுவையான இந்த படத்தின் கதை. இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு த்ரிதேவ் படத்தில் வந்த "ஒயே ஒய் - ட்ரிச்சி தொப்பி வாலே" பாடலை அனுமதி பெற்று ரீமேக் செய்துள்ளார்கள். மல்லிகா ஷெராவத் படத்தில் 'தெறம' காட்டியுள்ளதால் படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று அண்ணன் கா'னா கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்) கவனிக்கவும், கங்கணம், கங்கனா அல்ல).
06 டிஸ்னி பிக்ஸாரின் அனிமேஷன் படம் கார்ஸ் இரண்டாம் பாகம்: முதல் பாகம் வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வந்துள்ளது இந்த இரண்டாம் பாகம், அதுவும் முப்பரிமான வடிவுடன். நம்ம பயங்கரவாதி டாக்டர் செவனுக்கு மிகவும் பிடித்த படம் இது (அவருக்குதான் அனிமேஷன் படங்கள் என்றாலே அல்வா சாப்பிடுவது போலாயிற்றே). அனிமேஷன் படங்களுக்கு ரசித்து ரசித்து விமர்சனம் செய்யும் அவர், வழக்கம் போல இந்த முறை இந்த படத்தின் விமர்சனத்தையும் செய்வார்.
இயக்குனர் : ஜான் லாசெட்டர் மற்றும் பிராட் லூயிஸ்
நடிகர்கள் : அனிமேஷன் படம் பாஸ், ஒன்லி குரல் மட்டுமே ஸ்டார்களுடையது
இசையமைப்பாளர் : மைக்கேல் கியாக்கினோ
தயாரிப்பாளர் : வால்ட் டிஸ்னி சார்பில் டென்னிஸ் ரீம்
மொழி : ஒன்லி ஆங்கிலம், நோ தமிழ் டப்பிங்
என்ன மேட்டர் படத்துல: இந்த படத்தின் சிறப்பு ரெட் கார்பெட் ஸ்கிரீனிங் இப்போதுதான் முடிந்தது. படம் சூப்பர். அதுவும் கார் ரேசிங்கில் துப்பறியும் கதையமைப்பை புகுத்தி அட்டகாசம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டுமணி நேர அனிமேஷன் விருந்து இந்த படம். இதற்க்கு மேலே எதை சொன்னாலும் பயங்கரவாதி கோபித்துக்கொள்வார் என்பதால், மீத விமர்சனத்தை அவரே செய்ய ஆணையிட்டு நகருகிறேன்.
இந்த ஆறு படங்களை தவிர ராங்கோ (அனிமேஷன் படம்) மற்றும் கரிபியன் கடல் திருடர்கள் (Mock-Buster தமிழ் டப்பிங் படம்) ஆகிய இரண்டும்வேறு நாளை ரிலீஸ் ஆகிறது. இந்த வாரம் பார்க்க நிறைய புதிய படங்கள் வந்துள்ளது மனதிற்கு நிறைவை தருகிறது.
நாளை புதிய தமிழ் படத்தின் விமர்சனத்துடன் வருகிறேன். பை தி வே, இந்த 180 படம் நாளைக்கு அல்ல, நாளை மறுநாளே ரிலீஸ் ஆகிறது. சனிக்கிழமை ராசி சத்யம் தியட்டரை காப்பற்றுமா? பார்க்கலாம்.
4 comments:
Haiya Me the 1st :))
.
// செம கியூட்டான இந்த ஹீரோயினை ஒரு கன்னட பட பாடலில் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி தமிழில் புக் செய்துள்ளனர். நடிக்க வருகிறதா என்று பார்க்கவேண்டும். //
எதுக்கு உங்களோட அடுத்த படத்துக்கு புக் பண்ணவா ;-)
.
// தயாரிப்பாளர் கதையையோ, நடிப்பையோ சொல்லாமல் படத்தில் சார்மி ஜகபதி பாபுவுக்கு கொடுத்த ஒரு முழு நீல நீள லிப் டு லிப் முத்தத்தையே சொல்கிறார். அதை நம்பியே எங்கள் குரூப்பில் பலரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். //
சாமி சத்தியமா எனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லீங்கோவ் :))
.
// இதற்க்கு மேலே எதை சொன்னாலும் பயங்கரவாதி கோபித்துக்கொள்வார் என்பதால், மீத விமர்சனத்தை அவரே செய்ய ஆணையிட்டு நகருகிறேன். //
ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறோம் :))
.
Post a Comment