வணக்கம்.
ரொம்ப நாளாகவே இந்த பக்கம் வர முடியவில்லை. ஆனால் இன்று தமிழ் சினிமாவை திருப்பி போடும்படியாக ஒரு சம்பவம் நடந்தது (கண்டிப்பாக பில்லா ரிலீஸ் அல்ல). அதனாலேயே இந்த வலைப்பதிவு இங்கேயும் சரித்திரத்திலும் இடம் பெறுகிறது. இன்று காலையில் தினத்தந்தி படித்துக் கொண்டு இருந்தபோது இங்கே அருகில் இருக்கும் இந்த விளம்பரம் என்னை கவர்ந்தது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தைப் போலவே வாலிபன் சுற்றும் உலகம் என்று டைட்டில் இருந்தது, புரட்சித் தலைவர் எம்ஜியார் போலவே இருக்கும் ஒருவர் நடிப்பதுவுமே காரணமாக இருக்கலாம்.
ஏற்கனவே சென்ற ஆண்டு நாமக்கல் எம்ஜியார் என்றொருவர் நடித்து ஒரு படம் (ஆட்சி மாறியதும்) ரிலீஸ் ஆனது நினைவிருக்கலாம். அதிஷா கூட அந்த படத்தை பார்க்க ஆசைப்பட்டு,அவரது ஆசை நிறைவேறாமலேயே போனது ஒரு தனிக்கதை. ஆனால் அந்தப்படம் போல மொக்கையாக இல்லாமல் சற்றே நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த விளம்பரத்தை மறுபடியும் பார்த்தேன். இந்த படத்தின் இயக்குனர் யாரென்று பார்த்தால் A.R. லலிதசாமி என்றிருந்தது. என்னுடைய வாழ்நாளில் நான் பலவிதமான,வித்யாசமான பெயர்களை எல்லாம் கேட்டிருக்கிறேன்(அதில் ஒரு போலீஸ்காரர் தன்னுடைய மகனுக்கு கலவரம் என்றெல்லாம் பெயரிட்டு இருந்தது அடங்கும்). ஆனால் சத்தியமாக இந்த பெயரை கேள்விப்பட்டதே இல்லை. ஆகையால் அவர் யார், எனன செய்கிறார் என்று விசாரிக்கவாவது ஆசைப்பட்டு தகவல்களை சேகரித்தேன். அதன் விளைவே இந்த பதிவு.
பழனியை சேர்ந்த சிவா என்பர்தான் ஹீரோ. பொள்ளாச்சியை சேர்ந்த லலிதசாமி தான் இயக்குனர். நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு T.M.சவுந்தர்ராஜனும் P,சுசீலாவும் சேர்ந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்கள். இன்று சென்சார் போர்டுக்கு செல்லும் இந்த படம் அடுத்த வாரமோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரமோ ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ACTORS:
M.G.R SIVA
M.G.R HARI
A.R.LALITHASWAMY
MEENATHCHI
LATHA
AADAVAN
ASHOKRAJ
SENTHILVEL
MANAORMA
MUTHUKUMAR
SURULI MANAOHAR
SKOVAI SENTHIL
MUSIC: Mellisai mannar M.S.Viswanathan
LYRICS:
Padmasri ' Vali'
Kamakodian ( That bhut Tanjavuru)
Story ,screen play , Direction
A.R.LALITHASWAMY
Play Back Singers:
M.S.Viswanathan
T.M.Sounderarajan
Ananth
S.P.Balasubramaniam
P. Suseela
Chitra
Jayashree
Katrthika
Songs
Ramavararthi thottamithu
Mudal tamil un vizhilnile
Naan deivatahi pettra pillai
Unnai naan santhithen
Thentrale ini ennai thodathe
That bnut tanjavuru
Camera - Rajarajan
Stunts - Super Subbarayan
Art - Vinodth
Stills - Chandru
Production manager - Arumugam
Public relations officer - Venkat
Studio - A.V.M
Lab - Gemini
Production unit - Seven mounten
இன்று இந்த இயக்குனரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விரிவாக பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்றிரவு அவர் திரும்பவும் பொள்ளாச்சி செல்கிறார். திரும்பவும் சென்னை வந்து என்னை சந்திப்பதாகவும், ஒரு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றும் கூறியுள்ளார். பார்க்கலாம்.