வணக்கம்,
ஷெர்லக் ஹோம்ஸ் கதைத்தொடரின் பரம் ரசிகன் நான்! கதைகள் மட்டுமின்றி காமிக்ஸ், சினிமா, டிவி சீரியல் என பல வடிவங்களில் ஹோம்ஸ் வெற்றி பெற்றுள்ளார்!
2009ல் கை ரிட்சி இயக்கத்தில் ராபர்ட் டெளனி ஜூனியர், ஜூட் லா நடிப்பில் புதிய ஷெர்லக் ஹோம்ஸ் படம் வந்தது! இப்படம் வெளியானவுடன் ஒரு தேனிக்கூட்டை கலைத்து போட்டது போன்ற சூழல் நிலவியது! ராபர்ட் டெளனி ஜூனியர் இங்கிலீஷ்காரன் இல்லையென்பது முதல், ஹோம்ஸ் வாட்சனின் நட்பை ஒரின பாலியல் உறவு என எண்ணத் தோன்றும் வகையில் சித்தரிக்கப் பட்டது வரை ஏகப்பட்ட சர்ச்சைகள்!
ஹோம்ஸின் தீவிர விசிறிகள் படத்தை வெறும் ஆக்ஷன் படமாக பாவித்து காறித் துப்பினர்! ஹோம்ஸின் மதியூகத்தை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினர்! கை ரிட்சி தரப்போ நாங்கள் நாவலில் வரும் நுண்ணிய பல விஷயங்களை, காலப்போக்கில் மற(றை)ந்து போன ஹோம்ஸ் மற்றும் வாட்சனின் சண்டையிடும் திறமைகளை மீட்டெடுத்துள்ளோம் என்று வாதிட்டனர்! பல்வேறு சர்ச்சைகளுக்கு உண்டான போதிலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்! இல்லையெனில் இரண்டாம் பாகமெல்லாம் வருமா?!!
அதிலும் இரண்டாம் பாகத்தில் ஷெர்லக் ஹோம்ஸ் தனது பரம் வைரியான புரபசர் மோரியார்டியுடன் மோதுவதால் படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு!
கதை:
முதலாம் உலக யுத்தத்தை துவக்க முயன்று வரும் புரபஸர் மோரியார்டியை அந்தக் காலத்து ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஹோம்ஸ் தடுத்து நிறுத்துவதுதான் கதை!
சுவாரசியமான துணுக்குகள்:

- கட்டம் போட்ட கோட்டு, தொப்பி, வாயில் எப்போதும் புகையும் பைப், தனிமையில் வயலின் வாசித்துக் கொண்டே கேஸை சுளுவாக முடிப்பவர் என்று நாமறிந்த (அல்லது அறிந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும்) ஹோம்ஸின் அத்தனை குணாதிசயங்களையும் இப்பட வரிசை நொறுக்கித் தள்ளுகிறது!
- ஹோம்ஸை ஒரு ECCENTRIC GENIUS ஆகவே சர் ஆர்த்தர் கோனன் டாயல் உருவாக்கினார்! நம்பாதவர்கள் THE DYING DETECTIVE கதையை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்! காலப் போக்கில் அவரின் இமேஜ் மாறி விட, ஒரிஜினல் ஹோம்ஸை நம் கண் முன்னே மீண்டும் நிறுத்த முயல்கிறார் கை ரிட்சி!
- இப்படத்தில் ஹோம்ஸின் அண்ணன் மைக்ராஃப்ட் அறிமுகமாகிறார்! THE LEAGUE OF EXTRAORDINARY GENTLEMEN காமிக்ஸ் கதையில் வருவது போலவே ஒரு உளவுத்துறை தலைவராகவும், உயர் மட்ட அரசு தூதராகவும் வருகிறார்!
- அதே போல் டாக்டர் வாட்சனை சற்றே மடத்தனமாக சித்தரித்திருக்கும் பழைய படங்களின் முறையிலிருந்தும் இப்பட வரிசை மாறுகிறது! இது ஒரு வரவேற்கத் தக்க மாற்றம்!
- முதல் பாகத்தில் ஹீரோயினாக வரும் ஐரீன் ஆட்லர் (ரேச்சல் மெக் ஆடம்ஸ்) கதாபாத்திரம் ஆரம்பத்திலேயே கொல்லப் படுவது பரிதாபம்! அவருக்கு பதிலாக வேறொரு ஜிப்சி பெண் ஹீரோயினாக வருகிறார்! ஆம்! ஃபாரினிலும் கூட ஹீரோயின் இல்லாமல் படம் பண்ண மாட்டேங்குறாங்கப்பா!
- ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ஹோம்ஸ் கண்டம் விட்டு கண்டம் தாவி சாகஸம் செய்கிறார்! டமால், டுமீல் என்று படம் நெடுக வெடியோசை! ஷெர்லக் ஹோம்ஸ் படம் பார்க்கும் உணர்வே வரவில்லை! மாறாக ராஜா ராணி காலத்து ஜேம்ஸ் பாண்ட் போலவே வலம் வருகிறார் ஹோம்ஸ்!
- ஷெர்லக் ஹோம்ஸ் ஒரு மாறுவேட நிபுனர் என்று சில கதைகளில் குறிப்பிடப் பட்டிருக்கும்! ஆனால் இப்படத்தில் அத்திறமையை அதீதமாகவே கையாண்டுள்ளனர்! காட்சிக்கொரு முறை கெட்டப் மாற்றுகிறார் ஹோம்ஸ்!
- முதல் படத்தில் ஹோம்ஸுக்கும் வாட்சனுக்கும் இருப்பதாக குறிப்பால் உணர்த்தப்பட்ட ஓரின உறவை பலப்படுத்தும் வகையில் இப்படத்தில் மேலும் காட்சிகள் உள்ளன! அதுவும் ஹோம்ஸ் பெண் வேடமிடும் காட்சி கொஞ்சம் ஓவர் ரகம்!
- திரைப்படம் THE FINAL PROBLEM என்ற கதையை தழுவியிருக்கிறது! அதிலும் குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் காட்சி!
- படம் முழுவதும் ஜேம்ஸ்பாண்ட் பாணி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருந்தாலும் க்ளைமாக்ஸில் ஹோம்ஸும், மோரியார்ட்டியும் மோதிக் கொள்ளும் காட்சி படமாக்கப் பட்ட விதம் அபாரம்!
- இரு மாமேதைகள் மோதிக் கொள்ளும் களம் எதுவாக இருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?!! ஒரு புயல் வேக சதுரங்க ஆட்டத்தில்! அதிலும் ஹோம்ஸும், மோரியார்ட்டியும் எதிராளியின் ஓவ்வொரு அசைவையும் சிலபல ஆட்டங்கள் முன்கூட்டியே யூகித்து மனதளவிலேயே வெற்றி தோல்வியை நிர்ணயித்துக் கொள்வது... அப்பப்பா!
- கடைசி காட்சியில் மூன்றாம் பாகத்திற்கும் அடி போடுகிறார்கள்! வரட்டும்! அதையும் பார்ப்போம்!
- ராபர்ட் டவுனி ஜூனியர், ஜூட் லா மற்றும் வில்லன் மோரியார்ட்டியாக வரும் ஜாரெட் ஹாரிஸின் அற்புதமான நடிப்பு!
- க்ளைமாக்ஸ்!
- ஷெர்லக் ஹோம்ஸ் தனது மூளை பலத்தை உபயோக்கிக்கும் தருணங்கள் பின்புலத்தில் நடைபெறும் ஆக்ஷன் காட்சிகளில் காணாமல் போய்விடுவது!