வணக்கம்,
ஜேம்ஸ்பாண்ட் பாணி உளவாளி கதைகள் பெருவெற்றி பெற்றிருந்த காலம் 1960கள்! அப்போது தொலைக்காட்சித் தொடராக ஆரம்பித்த மிஷன் இம்பாசிபிள் மாபெரும் வெற்றியடைந்தது! அதன் வெற்றிக்கு லாலோ ஷிஃப்ரின் இசையமைத்த தீம் மியூசிக் மிகப்பெரிய காரணம்! பின்னர் 1996ல் டாம் க்ரூஸ் நடிப்பில் திரைப்படமாக வந்தது! அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட தொடர்ந்து படங்கள் வந்த வண்ணமிருந்தன!
மிஷன் இம்பாசிபிள் பட வரிசையின் மிகப் பெரிய ரசிகன் நான் இல்லை! இருப்பினும் அவாரிசைப் படங்கள் எப்போதுமே ஜனரஞ்சக வெற்றியில் சோடை போனதில்லை! ஆகையாலேயே இந்த நான்காம் பாகத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது!
கதை:
வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் பாணி கதைதான்! ரஷ்ய அணு ஆயுதங்களை முடக்கி விடக்கூடிய ரகசிய கோட்-ஐ ஒரு தீவிரவாதி கைப்பற்றி விடுகிறான்! பழியோ அமெரிக்க உளவாளிகளான ஈதன் ஹண்ட் (டாம் க்ரூஸ்) குழுவின் மீது விழுகிறது! ஆகையால் அவர்களுக்கு அமெரிக்க உளவுத்துறையிடமிருந்து எவ்வித உதவியும் கிடைக்காத நிலை உருவாகிறது!
பிறகு ஈதன் ஹண்ட் குழுவினர் ரஷ்யா, துபாய், இந்தியா என்று ஊர் சுற்றி சாகஸம் செய்து உலகை எப்படி காப்பாற்றினார்கள் என்பது தான் கதை!
சுவாரசியமான துணுக்குகள்:
நிறைகள்:
4/6 - நான்கு தோட்டாக்கள்!
ஆக்ஷன் ரசிகர்கள் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்!
ட்ரைலர்:

- வழக்கமாக மிக சீரியஸாக செல்லும் ஆக்ஷன் பட வரிசையான மிஷன் இம்பாசிபிள் தொடரில் இப்படம் ஒரு வரவேற்கத் தக்க மாற்றம்! படம் முழுக்க விரவிக் கிடக்கும் சுய நையாண்டி படத்தின் மிகப் பெரிய பலம்! மிஷன் இம்பாசிபிள் படங்கள் என்றாலே ஒரு சில குறிப்பிட்ட காட்சிகள் ஃபார்மூலா போல் எல்லா படங்களிலும் வரும்! அவை அனைத்தையுமே இப்படத்தில் நக்கல் செய்து விதிமுறைகளை மீறியுள்ளனர்! ஜேம்ஸ்பாண்ட் பட வரிசை ஏன் போரடிக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்! புதிதாக எதுவுமே முயற்சிப்பதில்லை!
- மிஷனை விளக்கும் ஆரம்பக் காட்சியில் ரகசிய தகவல் வழங்கிய பின் அந்த டேப் வெடித்துச் சிதறுவது வழக்கம்! இப்படத்தில் அதுவும் கிண்டலுக்குள்ளாக்கப் பட்டுள்ளது!
- மிஷன் இம்பாசிபிள் படங்களில் வழக்கமாக ஹீரோதான் மாஸ்க் அணிந்து சென்று வில்லன்களின் பாசறையில் நுழைந்து சாகஸம் செய்வார்! இதில் கடைசி வரை ஹீரோ மாஸ்க் அணிய முடியாமல் போகிறது! ஆனால் வில்லன் மாஸ்க் போட்டு ஹீரோவை ஏமாற்றி விடுகிறார்!
- டாம் க்ரூஸிற்கு வயது ஏறவே ஏறாதோ?!! இன்னும் இளமை பொங்க வலம் வருகிறார்! ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் டூப் போடாமலே நடித்து அசத்தியுள்ளார்!
- அந்த துபாய் ஸ்டண்ட் காட்சிகள் மயிர் கூச்செரிய வைக்கும் ரகம்! படத்தின் ஹை-லைட்டே அதுதான்! அற்புதம்! அற்புதம்!
- ஆனால் அதற்கு பிறகு வரும் மணல் புயல் சண்டையும், இந்தியக் காட்சிகளும் சற்றே போர் அடிக்கின்றன!
- அணில் கபூர் ஒரேயொரு காட்சியில் மட்டும் காமெடி பீஸாக வருகிறார்! இதற்கு இவருக்கு டாம் க்ரூஸுக்கு இணையாக பில்டப் போஸ்டர் வேறு! அவர் வரும் காட்சி மொக்கையோ மொக்கை!
- மும்பை என்று சொல்லி விட்டு க்ளைமாக்ஸ் காட்சிகள் முழுவதையும் பெங்களூருவில் எடுத்துள்ளனர்! பெங்களூரு சன் டிவி ஆபீசும் முக்கிய காட்சியில் வருகிறது! இதனாலேயே இரண்டாம் பாதி காட்சிகள் மனதில் ஒட்டவில்லை!
- டாம் க்ரூஸ்!
- மயிர்கூச்செரிய வைக்கும் ஆக்ஷன் காட்சிகள்!
- படம் நெடுக விரவிக் கிடக்கும் நையாண்டி தொணி!
- அணில் கபூர்!
- மணல் புயல் காட்சி!
- இந்தியாவில் படமாக்கப் பட்ட காட்சிகள் மனதில் ஒட்டவில்லை!
ஆக்ஷன் ரசிகர்கள் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்!
ட்ரைலர்: