வணக்கம்,
வழக்கமாக புதிய தமிழ் படங்கள் எல்லாமே சூட்டோடு சூட்டாக ஊட்டியில் ரிலீஸாகி விடும்! ஆனால் நண்பன் மட்டும் ஒரு வாரம் கழித்தே ரிலீஸானது! இதன் பிண்ணனியில் என்ன அரசியல் உள்ளதென்று தெரியவில்லை! ஆகையால் ஒரு வாரம் தாமதமாகவே இப்படத்தை கோவைக்கு சென்று பார்த்தேன்!
கதை:
3 இடியட்ஸ் ஹிந்தி படத்தின் தமிழாக்கம்!
சுவாரசியமான துணுக்குகள்:
பயங்கரவாதியின் பன்ச்:
நண்பன் - கலர் ஜெராக்ஸ்!
ட்ரைலர்:
வழக்கமாக புதிய தமிழ் படங்கள் எல்லாமே சூட்டோடு சூட்டாக ஊட்டியில் ரிலீஸாகி விடும்! ஆனால் நண்பன் மட்டும் ஒரு வாரம் கழித்தே ரிலீஸானது! இதன் பிண்ணனியில் என்ன அரசியல் உள்ளதென்று தெரியவில்லை! ஆகையால் ஒரு வாரம் தாமதமாகவே இப்படத்தை கோவைக்கு சென்று பார்த்தேன்!
கதை:
3 இடியட்ஸ் ஹிந்தி படத்தின் தமிழாக்கம்!
சுவாரசியமான துணுக்குகள்:
- ரீமேக் படங்கள் என்றாலே ஒரிஜினலிலிருந்து தமிழுக்கு மாற்றும் போது ஒரிஜினலின் தண்மை கெட்டுப் போவது வழக்கம்! அந்த பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டதாலோ என்னவோ ஷங்கர் ஹிந்திப் படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி இம்மி மாற்றாமல் தமிழுக்கு கொண்டு வந்துள்ளார்!
- இவ்வாறு செய்வதால் ஒரிஜினலில் உள்ள எல்லா குறைகளும் அப்படியே ரீமேக்கிலும் வரும் அபாயத்தை ஷங்கர் ஏனோ உணரவில்லை!
- ஹிந்தி படத்தின் தண்மை மாறாமல் தமிழுக்கு தருவதெல்லாம் சரிதான்! அதற்காக வரிக்கு வரி மாறாத வசனங்களும், காமிரா ஆங்கிள் கூட மாற்றாத ஷாட்டுக்களும், கதாபாத்திரங்களின் விசித்திரமான பெயர்களும் ஏனோ பொன்னி காமிக்ஸ் படிக்கும் உணர்வையே தருகின்றன!
- விஜய் அழகாக வரும் படங்கள் (அழகிய தமிழ் மகன், சச்சின்) ஓடாது என்கிற மாயையை இப்படம் உடைத்திருக்கிறது!
- முதல் பாடலில் வரும் ஊட்டி காட்சிகள் படமாக்கப் பட்ட விதம் அருமை! வழக்கமான இடங்களைத் தவிர்த்து வேறு இடங்களை காட்சிப்படுத்தியது புதுமை! ஊட்டியில் மீண்டும் பெரிய பட்ஜெட் தமிழ் படங்கள் (தெய்வத் திருமகள், நண்பன்) படமாக்கப் படுவது வரவேற்கத்தக்கது!
- கல்லூரியில் வரும் ஆரம்பக் காட்சிகள் அப்படியே ஹிந்தி படத்தை ஒத்திருப்பதால் ரொம்பவே பொறுமையை சோதிக்கின்றன! சத்யன் வந்த பிறகுதான் படத்தை ஒன்றிப் பார்க்க முடிகிறது!
- விஜய் ஆமிர் கானை அப்படியே இமிடேட் செய்ய முயல்கிறார்! இதனால் வழக்கமான இளைய தளபதி மிஸ்ஸிங்! இது நல்லதா, கெட்டதா என்று என் போன்ற வேட்டைக்காரன், சுறா ரசிகர்களுக்கு விளங்கவில்லை!
- விஜய்யின் க்ளைமாக்ஸில் கெட்டப் மாற்றி பயமுறுத்தும் பாணி நண்பனிலும் தொடர்கிறது! இதை மட்டும் இளைய தளபதி கைவிட்டாரென்றால் பரவாயில்லை!
- வழக்கமாக திரையில் தோன்றினாலே எரிச்சல் பொத்துக் கொண்டு வரும் ஸ்ரீகாந்த் இப்படத்தில் ரசிக்க வைக்கிறார்! அவருடைய கரியரில் நண்பன் மிக முக்கியமான படம்! ஜீவா வழக்கம் போல கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார்!
- இலியானாவை பார்த்தால் பாவமாக இருக்கிறது! உடம்பை குறைக்கிறேன் பேர்வழி என்று சோறு திங்காமல் வாடி வதங்கி போயிருக்கிறார்! அவரது சிறப்பம்சமான இடுப்பு வளைவுகள் கூட காணாமல் போய்விடுமளவுக்கு டயட்டில் இருக்கிறார்! யாராவது அவருக்கு கொஞ்சம் நல்ல சோறு வாங்கிக் கொடுங்கப்பா!
- சத்யராஜ், சத்யன் இருவரும் சிறப்பாகவே செய்திருந்தாலும் ஹிந்தியில் வரும் போமன் இராணி, ஓமி வைத்யாவோடு கம்பேர் செய்யாமல் இருக்க முடியவில்லை! இருவருமே அற்புதமான டைமிங் சென்ஸ் உள்ள நடிகர்கள்! ஹிந்தியில் வரும் அதே பாணியில் நடித்திருப்பதால் தமிழில் அவர்களின் தனித்தண்மை காணாமல் போய்விடுகிறது!
- பாடல்களில் வழக்கமான ஷங்கரின் பிரம்மாண்டமும், விஜய்யின் புயல் வேக நடனமும் மிஸ்ஸிங்! பாடல்களிலாவது ஷங்கர் தன் முத்திரையைப் பதித்திருக்கலாம்!
- விஜய்க்கு ஒரு ஓபனிங் சாங், சண்டைக் காட்சி, பன்ச் டயலாக் கூட கொடுக்காத ஷங்கர் இலியானாவின் இல்லாத இடுப்பை வர்ணித்து ஹிந்தியில் இல்லாத ஒரு குத்துப் பாடலை வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை! இலியானாவின் இடுப்புக்கு இளைய தளபதியை விட மார்கெட் வால்யூ அதிகமாகிவிட்டதா என்ன?!!
- ஒரிஜினலின் தண்மை மாறாமல் தமிழுக்கு தந்திருப்பது!
- ஒளிப்பதிவு!
- சத்யன்!
- ஸ்ரீகாந்த்!
- படத்தில் ஷங்கரும், விஜய்யும் காணவில்லை!
- ஒல்லி பிச்சான் இலியானா!
- ஹாரிஸ் ஜெயராஜ்!
- படத்தில் ஷங்கரும், விஜய்யும் காணவில்லை!
4/6 - நான்கு தோட்டாக்கள்!
பயங்கரவாதியின் பன்ச்:
நண்பன் - கலர் ஜெராக்ஸ்!
ட்ரைலர்:
2 comments:
இனிய மாலை வணக்கம் நண்பரே,
நச்சன்னு நண்பன் படத்தை பற்றி நாலு வார்த்தை சொல்லிட்டீங்க பாஸ்..விமர்சனம் அருமை.உங்கள் பார்வையில் நீங்கள் உணர்ந்ததை அழகாக சொல்லியுள்ளீர்கள்.நன்றி.
hii.. Nice Post
Thanks for sharing
Best Regarding.
More Entertainment
For latest stills videos visit ..
www.chicha.in
Post a Comment