வணக்கம்,
ஷ்ரெக் அனிமேஷன் பட வரிசையின் மிகப் பெரிய ரசிகன் நான்! அதில் சைடு ஹீரோவாக வரும் பூடிஸ் கால் பூனையின் (PUSS IN BOOTS) சாகஸங்கள் தனி திரைப்படமாக வரப்போகிறது என்ற அறிவித்த முதலே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருந்தது! ஒரு வழியாக மிகத் தாமதமாக பார்த்தாலும் பார்த்த மாத்திரத்திலேயே பதிவிடத் தூண்டியது! நீண்ட நெடுநாட்கள் கழித்து இவ்வலைப்பூவை உயிரூட்ட இதுவே காரணம்!
கதை:
பூடிஸ் கால் பூனை, ஜாக்கும் மந்திர அவரைக்கொடியும், ஹம்டி டம்டி, ஜாக்கும் ஜில்லும், தங்க முட்டையிடும் வாத்து, கதை சொல்லும் அம்மா வாத்து முதலிய தேவதைக் கதைகளையும், பாலகர் பாடல்களையும் காமெடியுடன் கலந்து கட்டி அடித்து விட்டால் அதுதான் கதை!
சுவாரசியமான துணுக்குகள்:
6/6 - ஆறு தோட்டாக்கள்!
இரண்டு கட்டை விரல்கள் மேலே!
அனிமேஷன் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்! அதுவும் நிச்சயம் 3Dல்!
பயங்கரவாதியின் பன்ச்: PUSS IN BOOTS - இந்தப் பூனை பீரையும் குடிக்கும்!
ட்ரைலர்:
ஷ்ரெக் அனிமேஷன் பட வரிசையின் மிகப் பெரிய ரசிகன் நான்! அதில் சைடு ஹீரோவாக வரும் பூடிஸ் கால் பூனையின் (PUSS IN BOOTS) சாகஸங்கள் தனி திரைப்படமாக வரப்போகிறது என்ற அறிவித்த முதலே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருந்தது! ஒரு வழியாக மிகத் தாமதமாக பார்த்தாலும் பார்த்த மாத்திரத்திலேயே பதிவிடத் தூண்டியது! நீண்ட நெடுநாட்கள் கழித்து இவ்வலைப்பூவை உயிரூட்ட இதுவே காரணம்!
கதை:
சுவாரசியமான துணுக்குகள்:
- அண்டோனியோ பண்டெராஸ், சல்மா ஹயெக், பில்லி பாப் தார்ண்டன் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்திற்கு குரல் கொடுத்துள்ளனர்!
- முதலில் இப்படம் DIRECT-TO-VIDEOவாகத்தான் வெளிவரவிருந்தது! ஆனால் ஷ்ரெக் தொடரின் வெற்றியினால் இது முழு நீள 3D திரைப்படமாக வெளிவந்து நமக்கெல்லாம் விருந்தளித்துள்ளது!
- குங்ஃபூ பாண்டா 2 பெரு வெற்றியைத் தொடர்ந்து ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு SURE-FIRE WINNER இப்படம்! டிஸ்னியெல்லாம் இனி ரொம்பவே கஷ்டப் பட வேண்டியிருக்கும்! இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஆவலோடு எதிர் பார்க்கிறேன்!
- NO COMMENTS!
தியேட்டர் டைம்ஸ்:
- கோவையில் ப்ரூக்ஃபீல்ட் ப்ளாசாவில் புதிதாக துவங்கப் பட்டுள்ள thecinema திரையரங்கில் இப்படத்தை 3Dல் கண்டு களித்தேன்!
- தினசரி மாலை 4:30 மணிக்கு ஒரேயொரு காட்சி மட்டுமே இப்படம் திரையிடப்பட்டிருப்பதால் அரங்கம் நிறைந்திருந்தது!
- 3D அதியற்புதமாக இருந்தது! இதுவரை கோவை கனகதாரா தியேட்டரில் இத்துனூண்டு ஸ்கீரினில் மொக்கை 3Dல் படம் பார்த்துவிட்டே ‘ஆஹா! ஓஹோ!’ வென புகழ்ந்து கொண்டிருந்த எனக்கு இந்த அனுபவம் ஒரு EYE-OPENER!
- சத்யம் நிறுவத்தின் ஒரு அங்கம்தான் thecinema! மொத்தம் ஆறு திரையரங்குகள்! சத்யம் நிறுவனத்தினரின் தரம் காய்ந்து போய் கிடக்கும் கோவை வாசிகளுக்கு வரப்பிரசாதம்!
- சென்னையில் 3D திரையரங்குகளில் வழக்கமாக முதல் மற்றும் கடைசி மூன்று வரிசைகள் காலியாகவே விடப்பட்டிருக்கும்! பார்வாயாளர்களின் வசதிக்காக இப்படியொரு ஏற்பாடு! ஆனால் கோவையில் முதல் வரிசையிலும் மக்கள் அமரவைக்கப் பட்டிருப்பது ஆச்சரியமளித்தது!
- பக்கத்து சீட்டில் ரெண்டு பொடியன்கள் அமர்ந்து செம கூத்து அடித்துக் கொண்டிருந்தனர்! கொறிப்பதற்கு வேறு ஏகப்பட்ட அயிட்டங்களை திரையரங்கினுள்ளேயே ஆர்டர் செய்து படம் முடியும் வரை தின்றே தீர்த்தனர்! இதில் ஒருவன் கண்ணாடியை வேறு தொலைத்து விட்டு இடைவேளை வரை இருட்டில் தேடிக் கொண்டேயிருந்தான்! படத்தை பார்த்து ரசிப்பதா, இவர்களை கண்டு சிரிப்பதா என்றே தெரியவில்லை?!!
- எல்லாமே
- ஒன்றுமேயில்லை!
இரண்டு கட்டை விரல்கள் மேலே!
அனிமேஷன் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்! அதுவும் நிச்சயம் 3Dல்!
பயங்கரவாதியின் பன்ச்: PUSS IN BOOTS - இந்தப் பூனை பீரையும் குடிக்கும்!
ட்ரைலர்:
4 comments:
வந்தோம்ல பஸ்ட்
கண்டிப்பாக பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன்.பார்க்க முடியவில்லை.
PUSS IN BOOTS (3D)- நீங்க நம்புரீங்களோ இல்லையோ படத்தையே நான் இப்பதான் கேள்விப்படுறேன்.
அறிமுகம் + விமர்சனத்துக்கும் மிக்க நன்றிகள்.வாழ்த்துக்கள் பல.
நல்ல விமர்சனங்கள்
Post a Comment