டிஸ்னி பிக்ஸார் தயாரிப்பில் இதுவரை வெளிவந்துள்ள அனிமேஷன் படங்களிலேயே மிக மொக்கையானது எனப் பெயர் பெற்ற படம் கார்ஸ்! அப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிறது என்றதும் ‘இதைப் போய் யாராவது இரண்டாம் பாகம் வேறு எடுப்பார்களா?!!’ என்ற கேள்வி எழுந்தது! அந்த பயம் நியாயமானதே என்று நிரூபிக்கிறது கார்ஸ் 2 (3D)!
முதல் பாகம் பற்றி அறியாதோருக்கு ஒரு சிறு அறிமுகம்! முழுக்க முழுக்க பேசும் கார்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படமே கார்ஸ்! லைட்னிங் மெக்குவீன் என்ற தலைக்கனம் பிடித்த சாம்பியன் ரேஸ் கார் தான் ஹீரோ! அது எப்படி தன்னிலை உணர்ந்து வாழ்விலும் ரேஸிலும் வெற்றி பெறுகிறது என்பதே கதை! ஓவன் வில்சன், பால் நியூமன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் தங்கள் குரல் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தாலும் படத்தின் நீளம் ஒரு பெரிய குறையாகவே இருந்தது! கார்ஸ் 2ம் அப்படித்தான்!
பரவலான கருத்து என்னவென்றால் முதல் பாகத்தை விட இது படு மொக்கை என்பதே! நான் இதில் வேறுபடுகிறேன்! ஏனெனில் இதில் வரும் ஜேம்ஸ்பாண்ட் கார் கதாபாத்திரமே! அது மட்டும் இல்லையெனில் மேடரின் மொக்கைகள் தாங்க முடியாமல் தியேட்டரை விட்டு ஓடியிருப்பேன்!
கதை:
முதல் பாகத்தில் அல்லக்கையாக வரும் மேடர் தான் இதில் ஹீரோ! இந்த ஓட்டை லாரியை அமெரிக்க உளவாளி என்று இருதரப்பு உளவாளிகளும் எண்ணிவிட என்ன நடக்கிறதென்பதே கதை! நடுவில் வழக்கமான டிஸ்னியின் நட்பு, உறவுகள், காதல் பற்றிய செண்டிமெண்ட் காட்சிகள்!
சுவாரசியமான துணுக்குகள்:
- லைட்னிங் மெக்குவீன் என்பது பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஸ்டீவ் மெக்குவீன் நினைவாக வைக்கப்பட்ட பெயராகும்! ஸ்டீவ் மெக்குவீன் நமது தல அஜீத்தைப் போலவே தீவிர ரேஸ் பிரியர்! இவர் பல படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தார்! கார் சேஸிங் காட்சிகளில் டூப் போடாமல் தானே காரை ஓட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்!
- லைட்னிங் மெக்குவீனுக்கு குரல் கொடுத்திருப்பது ஓவன் வில்சன்!
- பால் நியூமன் இறந்து விட்டதால் அவரது கதாபாத்திரம் இப்படத்தில் இல்லை!
- ஜேம்ஸ் பாண்ட் கார் வழக்கமாக ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் ஓட்டி வந்து சாகஸம் புரியும் ஆஸ்டன் மார்ட்டின் கார்களை ஒத்திருக்கிறது! இதற்கு குரலளித்திருப்பவர் மைக்கேல் கெய்ன்!
- இவர்கள் தவிர ஃப்ராங்கோ நீரோ, வனெஸ்ஸா ரெட்க்ரேவ், சீச் மரின் போன்ற பல பிரபலங்கள் சிறு சிறு வேடங்களை ஏற்றுள்ளனர்!
- ரேஸில் பங்கேற்கும் கார்கள் சிலவற்றுக்கு நிஜ ரேஸ் கார் ட்ரைவர்களே குரல் கொடுத்துள்ளனர்! அவர்கள் நிஜத்தில் ஓட்டும் கார் போலவே படத்திலும் கார்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்!
- கார்ஸ் திரைப்படங்களின் இயக்குனர் ஜான் லாஸிட்டர் ஒரு கார் வெறியர்! இவர் தன் படங்களுக்கு உந்துதலாக அமைந்தது டிஸ்னியின் இந்த கார்ட்டூன் தான் என்று குறிப்பிடுகிறார்! இந்தக் கார்ட்டூன் கார்ஸ் படங்களை விட பல மடங்கு உயர்ந்தது என்று பார்த்தாலே புரியும்!
தியேட்டர் டைம்ஸ்:
- இப்படம் கோவையில் ரிலீஸாகவில்லை! சென்னையில் ஐநாக்ஸில் 3Dல் கண்டு களித்தேன்!
- இப்படம் 3Dல் உருவாக்கப்படிருந்தாலும் கூட குங் ஃபூ பாண்டா, ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் அளவுக்கு 3D சிறப்பாக இல்லை!
நிறைகள்:
- ஜேம்ஸ்பாண்ட் காரின் சாகஸங்கள்!
- போப், இங்கிலாந்து ராணி, இளவரசர் வில்லியம் போன்ற பல பிரபலங்களை கார் வடிவில் சித்தரித்திருப்பது பாராட்டுக்குரியது! டிஸ்னி பிக்ஸார் கலைஞர்களின் கற்பனைத்திறனுக்கு இது ஒரு சோறு பதம்!
- ஒவ்வொரு ஊருக்கும் கதை பயணிக்கும் போதும் காட்டப்படும் அந்தந்த ஊரின் கண்கவர் காட்சிகள்! 3Dல் இன்னும் சிறப்பு!
குறைகள்:
- நீளம்!
- அனிமேஷன் படத்தில், அதுவும் ரேஸ் கார்கள் பற்றிய படத்தில் பேசியே கழுத்தறுக்கிறார்கள்! வளவளா வசனங்கள்!
- டிஸ்னியின் வழக்கமான குழந்தைகள் பட ஃபார்மூலா! சலிப்பு தட்டி விட்டது!
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:
3/6 - மூன்று தோட்டாக்கள்!
அனிமேஷன் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்! முடிந்தால் 3Dல்!
பயங்கரவாதியின் பன்ச்: CARS 2 - கட்டை வண்டி!
ட்ரைலர்:
7 comments:
ஜேம்ஸ்பாண்ட் காரின் சாகஸங்கள் சிறப்பான ஒன்று....
பல படங்கள் இரண்டாம் பாகம் எடுக்க இருந்தும் கார்ஸ் 2 வந்தது அதிசியமான ஒன்றே. முதலில் Monsters Inc இரண்டாம் பாகம் வருமென சொல்லி வரவில்லை. பலரும் இரண்டாம் பாகம் எதிர்பார்க்கும் மற்றொரு pixar படம் Incrediples.ஆனால் கார்ஸ் 2 வந்தது ஏன் என்று தெரியவில்லை
ஆனால் தலைவரே எனக்கும் என் நண்பனுக்கும் குங் ஃபூ பாண்டாவில் வந்த கொட்டாவி இந்த படத்தில் வரவில்லை
அப்பறம் .... வந்தோம்ல பஸ்ட்
i am really wondering about your review, because this CARS-1 movie was big hit in the gulf region's, and one more thing this movie is for childrens not for adults.
i hope you are adult.
பதிவரே அனிமேசன் என்றாலே குழந்தைகள் பார்க்கத்தான் நீங்க சொன்னது போல பாத்தா தப்பு
பெரிய குழந்தையா பாருங்க முடியலனா அடல்ட்ஸ் உலக சினிமா பக்கம் போங்க சகோ உங்களுக்கு குழந்தை மனம் இல்லை என்றே நினக்கிறேன்
// அனிமேஷன் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்! முடிந்தால் 3Dல்! //
கண்டிப்பாக பாத்திடுவோம் :))
.
Rise of the Apes விமர்சனம் - http://castrokarthi.blogspot.com/2011/08/blog-post_20.html
Post a Comment