நேற்று மதுரையில் சினிப்ப்ரியா தியேட்டருக்கு சென்றார் இயக்குனர் மிஸ்கின். அங்கு நடந்த சில சுவையான சம்பவங்களை இங்கு அளிக்கிறேன்:
- படம் பார்த்துவிட்டு வெளியே வந்துக்கொண்டு இருந்த ரசிகர்களில் சிலர் இயக்குனர் மிஸ்கினை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனடியாக அங்கு ஒரு பெருங்கூட்டம் சேர்ந்து விட்டது விட்டது.
- 40 வயது ரசிகர் ஒருவர் நேராக வந்து இயக்குனரை கட்டிப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டார். ஆரவாரமாக இருந்த அந்த இடம் திடீரென்று அமைதிப்பூங்காவாக மாறிவிட்டது. இரண்டு நிமிடங்களுக்கு மேலாக அழுதுக்கொண்டு இருந்த அந்த நபர் பின்னர் நன்றி சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.
- நடுத்தர வயது பெண்மணி ஒருவர் முதலில் வாழ்த்து சொல்லி பேசிக்கொண்டு இருந்தார். பேச்சின் நடுவிலேயே உடைந்து அழ ஆரம்பித்து விட்டார். இயக்குனர் அவரை தேற்றி அனுப்பி வைத்தார்.
- ஐம்பது வயதை நெருங்கும் ஒருவர் எதுவுமே பேசாமல் வந்து சாஷ்டாங்கமாக இயக்குனரின் காலில் விழுந்து விட்டார். இயக்குனர் தடுக்க முயற்ச்சித்தார் . காலில் விழுந்த அவர், பின்னர் எதுவுமே பேசாமல் ஒரு புன்னகையுடன் சென்று விட்டார்.
இவாறாக கோவை, திருச்சி, கரூர் மற்றும் மதுரை சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இயக்குனர் இன்று சென்னை த்ரிரும்பி விட்டார். இந்த சூறாவளி சுற்றுப்பயணத்தில் அவருக்கு கிடைத்த மக்களின் ஏகோபித்த ஆதரவு தான் அவரை தற்போது இயங்க வைத்துக்கொண்டு இருகீரது என்றால் அது மிகையல்ல.
நாளைக்கு மாலை (ஞாயிற்றுக்கிழமை) சாயங்காலம் 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் இருக்கும் "புக் பாய்ன்ட்" என்னும் புத்தக சாலையில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்கிற படத்தை பற்றிய ஒரு விவாதகூட்டம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை தங்கங்கள் பவா செல்லதுரையும், கல்வியாளர் கருணாவும் ஒழுங்கு செய்துள்ள இந்த கூடத்திற்கு அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன்
2 comments:
Good one my friend!
nice post.
T20 World Cup 2020 Fixture
T20 World Cup 2020 Fixture PDF
T20 World Cup 2020 Fixture Download
Post a Comment