Saturday, February 4, 2012

மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

2003ல் புதிய கீதை என்றொரு படம் வெளிவந்து தமிழ் சினிமாவின் தலையெழுத்தையே தலைகீழாக மாற்றிப் போட்டது! இப்படம் தோல்வியடைந்ததால் தான் அது வரை க்ளாஸ் படங்களில் (?!!) மட்டுமே நடித்து வந்த இளைய தளபதி மருத்துவர் விஜய் மாஸ் படங்களுக்குத் தாவினார்!

அப்படம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் தமிழ் சினிமாவின் கதி என்னவாகியிருக்குமோ என்றென்ன மனம் அஞ்சுகிறது! ஆனால் அப்படத்தை ஏற்றுக் கொள்ளுமளவுக்கு தமிழ் சினிமா ரசிகன் அப்போது பக்குவப் பட்டிருக்கவில்லை!

2009ல் புதிய கீதை படத்தின் கதையை அப்படியே சுட்டு பொடியன்களை வைத்து பாண்டிராஜ் என்கிற அறிமுக இயக்குனர் ‘பசங்க’ என்ற படத்தை எடுத்தார்! படம் தேசிய விருதெல்லாம் வாங்கியது! நியாயமாக பார்த்தால் அந்த விருது இளைய தளபதி மருத்துவர் விஜய்க்குதான் கிடைத்திருக்க வேண்டும்! எல்லாம் அயல் நாட்டு சதி!

‘பசங்க’ படம் அவார்டு வாங்கியதால் இயக்குனர் பாண்டிராஜின் அடுத்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது! 'வம்சம்' என்றொரு படத்தை தந்து நம்மையெல்லாம் துவம்சம் செய்தார்!

இப்போது மீண்டும் பொடியன்களை வைத்து ‘மெரினா’ என்றொரு படத்தை அவர் இயக்கி அவரே தயாரித்து வெளியிட்டிருக்கிறார்!

கதை:

கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்களின் அன்றாட வாழ்வியலில் சந்திக்கும் துன்பங்களையும், துயரங்களையும், துக்கங்களையும், சோகங்களையும், சிறு சிறு சந்தோஷங்களையும், அவர்கள் கடந்து செல்லும் பல வித நிலைகளில் வாழும் விளிம்பு நிலை மனிதர்களின் அவல நிலை வாழ்வியல் கோட்பாடுகளையும்அவதானிக்கும் திரைச் சித்திரமாகவே விளங்குகிறது மெரினா!

[அல்லது]

கதையா?!! ... அப்படீன்னா?!!

சுவாரசியமான துணுக்குகள்:

சுவாரசியமான விஷயம் படத்தில் ஒன்னுமேயில்லை! இருந்தாலும் நமக்கு கடமை தான் முக்கியம்!

  • தற்போது தமிழ் சினிமாவில் மதுரையின் ஆதிக்கம்தான்! என்றாலும் கூட சென்னையில் வாழும் அனைவருமே மதுரை ஸ்லாங்கிலேயே பேசுவது கொஞ்சம் ஓவராகப் படவில்லையா?!! சுத்தமான சென்னைத் தமிழ் படங்களில் காணக் கிடைப்பது அரிதாகி விட்டது!
  • அதே போல சென்னைக்கு பிழைப்பு தேடி வருபவர்கள் அனைவரும் தென் மாவட்டங்களிலிருந்தே வருவது உதைக்கிறது! பக்கத்தில் உள்ள வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் முதலிய மாவட்டங்களிலிருந்து யாருமே சென்னைக்கு பிழைப்பு தேடி வருவதில்லையா?!! அல்லது இயக்குனரின் கண்களுக்கு அவர்களெல்லாம் படவில்லையா?!!
  • நகர காதலை மட்டம் தட்டுவதாக நினைத்துக் கொண்டு ஒட்டு மொத்த பெண்கள் சமூகத்தையே கிண்டலுக்கு உள்ளாக்கியிருக்கிறார் இயக்குனர்! மாதர் சங்கங்கள் இதையெல்லாம் கண்டிக்க மாட்டார்களா?!!
  • சிவகார்த்திகேயன் சிறப்பான டைமிங் சென்ஸ் உடையவர்! ஆனால் பாவம் SMS ஜோக் ரேஞ்சுக்கு இறங்கி விட்டார்! அவரும் ஓவியாவும் வரும் காட்சிகள் சுத்த வேஸ்ட்! படத்துடன் ஒட்டவேயில்லை!
  • கதாபாத்திரங்கள் திடீர் திடீரென வருவதும் போவதுமாக ஒரே குழப்பம்! அந்த பிச்சைக்கார தாத்தா கடைசியில் செத்துப் போவது அவர் முதல் ஃப்ரேமில் வந்தவுடனேயே தெரிந்து விடுகிறது!
  • படத்தில் ஜெயப்பிரகாஷ் வரும் காட்சியில் ஒரே அட்வைஸ் மழை! தாங்கலைடா சாமி!
  • படத்தின் காட்சிகளை அன்றன்றைய காலை செய்தித்தாளகளைப் பார்த்து எழுதியிருப்பாரோ என்னமோ?!! படம் முழுவதும் செய்திகளின் கோர்வையாக இருக்கிறதே ஒழிய திரைக்கதை எனவொன்று உருப்படியாக இல்லை!
  • ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் பேப்பரில் நியூஸ் வருகிறது! தினகரனோடு IN-FILM பண்ணியதற்காக இப்படியா?!!
  • அவார்டு வாங்கனும்னு முடிவு பண்ணிட்டு ஒலகப் படம் எடுக்கிறீங்க, சரி! அதை ஏன் ஆமை வேகத்தில் எடுக்கிறீங்க?!! இப்படி ஒரு படமெடுத்துட்டு அதை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதை விட அவார்டுதான் நோக்கமென்றால் பேசாமல் ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கலாமே?

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

1/6 - ஒரே ஒரு தோட்டா!
பயங்கரவாதியின் பன்ச்: 

மெரினா - படம் பாக்குறதுக்கு தியேட்டர் போற மாதிரி இருந்தா பேசாம பீச்சுக்காவது போங்க! ஏன்னா ரெண்டு இடத்திலேயும் காத்துதான் வாங்குது! 

ட்ரைலர்:

12 comments:

King Viswa said...

என்ன கொடுமை இது தோழர்? இந்த மாதிரி பதிவு இட்டுவிட்டு அதுக்கு நடுநிலைமை விமர்சனம் என்று சொல்வதா?

இல்லை, படம் அந்த அளவுக்கு உண்மையிலேயே மொக்கையா?

Kumaran said...

ரொம்ப கச்சிதமாக தாங்கள் கண்டவற்றை ரசித்தவற்றை வெளிப்படையாக எழுதியுள்ளீர்கள்..அருமை.நன்றி.

ஜீ... said...

என்ன பாஸ் இது அவ்வளவு மொக்கையா படம்?

உங்கள் ஏனைய விமர்சனங்கள் சில வாசித்தேன்! செம்ம ரகளை குறிப்பா வேட்டை, பிசினஸ்மேன்! :-)
போட்டுத் தாக்குங்க! :-)

கோவை நேரம் said...

அட....அவ்ளோ மொக்கையா.....

ஹாலிவுட்ரசிகன் said...

//மெரினா - படம் பாக்குறதுக்கு தியேட்டர் போற மாதிரி இருந்தா பேசாம பீச்சுக்காவது போங்க! ஏன்னா ரெண்டு இடத்திலேயும் காத்துதான் வாங்குது!//

என்ன ஒரு பன்ச். நல்லா விமர்சித்திருக்கீங்க. ஆனா படம் நல்லாயிருக்குன்னு படம் பார்த்தவங்க சொன்னாங்க. ஹ்ம் ... கருத்துக்கள் மாறுபடும் தானே.

சினி பித்தன் said...

நண்பா படம் என்ன அவ்வளவு மோக்கையாவா இருக்கு !!! போராளி கு அடுத்து இதுதான் வரவேற்பு கிடைக்கும்னு யோசிச்சேன் ;( :(

kalaipriyan said...

Nanum romba nambi ponen... pandiyaraj rombavum yemaththitar...... merina- pavam siva karthikeyan.

சி.பி.செந்தில்குமார் said...

பயங்கரவாதியின் பஞ்ச் பயங்கரம்!!

MuratuSingam said...

//////பயங்கரவாதியின் பன்ச்:
மெரினா - படம் பாக்குறதுக்கு தியேட்டர் போற மாதிரி இருந்தா பேசாம பீச்சுக்காவது போங்க! ஏன்னா ரெண்டு இடத்திலேயும் காத்துதான் வாங்குது! ///////

காசு குடுத்து காத்து வாங்கி இருக்கீங்க!!!!!

உங்கள் எழுத்து ரசிக்கும்படிய இருக்கு....

Kumaran said...

இனிய சகோ...லிப்ஸ்டர் அவார்ட் அப்படிங்கற ஒரு விருதை எனக்கு தந்துள்ளார்கள்..இதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்..இதை தங்களை கவன்ற ஐந்து பதிவர்களுக்கு பகிரவும்..நன்றி,

வியபதி said...

ரெண்டு இடத்திலேயும் காத்துதான் வாங்குது!

இதையும் தைரியமாக துணிந்து எழுதியிருப்பதற்குப் பாராட்டுக்கள்

சாவி said...

Thanks Friends.

சாவி யின் தமிழ் சினிமா உலகம்

ருத்ரபூமி 10-02-2012 Journey 2: The Mysterious Island திரை விமர்சனம்

Post a Comment