Recent Posts

Thursday, January 26, 2012

THE BUSINESSMAN: 13.01.2012 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

எனது வேண்டப்பட்ட விரோதியாகிய ஒருவரின் ரசனை அலாதியானது! தமிழில் போக்கிரியை பார்க்காமலேயே க்ளைமாக்ஸில் வரும் போலீஸ் விஜய் வாட்ச்மேன் கெட்டப்பில் வருவதாக நக்கலடிப்பார் (அது உண்மைதான்...இருந்தாலும்)! தெலுங்கில் மகேஷ் பாபு போலீஸ் கெட்டப்பில் செம கெத்தாக இருந்ததாக பீலா விடுவார்! அப்புறம் படம் பார்த்த பின்புதான் மகேஷ் பாபு என்.சி.சி. மாணவனைப் போல தோற்றமளிக்கும் உண்மை புரிந்தது!

அதே போல் எந்தவொரு தெலுங்கு ரீமேக் படத்தையும் தமிழில் மொக்கையாக இருப்பதாகவும், தெலுங்கில் அதன் ஒரிஜினல் சூப்பராக இருந்ததாகவும் கதையளப்பார்! இவ்வளவு நாள் அவர் சொல்வதை நம்பிக் கொண்டுதான் இருந்தேன், நானும் தெலுங்கில் படங்கள் பார்க்க ஆரம்பிக்கும் வரை!

தூக்குடு என்றொரு மகேஷ் பாபு படத்தை இவரின் தொல்லை தாங்காமல் பார்த்து தொலைத்தேன்! 1960களிலேயே அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகி விட்ட ஒரு திரைக்கதை உத்தியைக் கையாண்டு மரண மொக்கை போட்டது படம்! ஆனால் இவரோ இதுக்கெல்லாம் உங்களுக்கு ரசனை போதாது என்றெல்லாம் கடுப்பேற்றினார்!

மஹாதீரா போன்ற அற்புதமான படங்கள் அவ்வப்போது தெலுங்கில் வருகின்றன தான், இல்லையென்று சொல்லவில்லை! ஆனால் ஆந்திராவாலாக்களே மொக்கையென்று ஒதுக்கி விட்ட படங்களை இவர் மட்டும் எப்படி அற்புதம் என்று ரசிக்கிறாரோ புரியவில்லை!

சரி, மொக்கை போட்டது போதும்! இனி படத்தை பற்றி பார்ப்போம்!

பூரி ஜகன்னாத், மகேஷ் பாபு என்கிற வெற்றிக் கூட்டணியில் வந்திருக்கும் படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது! கோவையில் thecinema திரையரங்கில் இப்படத்தை கண்டுகளித்தேன்!

கதை:

சாதாரண மனிதன் ஒருவன் மும்பைக்கு வந்து ஒரு தாதாவாகி பின்னர் கார்ப்பரேட் பாணியில் இந்தியா முழுக்க தன் ரெளடி ராஜ்யத்தை எவ்வாறு நிறுவுகிறான் என்பதுதான் கதை! இதில் வழக்கமான தெலுங்கு படங்களுக்குரிய அனைத்து மசாலா சமாச்சாரங்களும் அடக்கம்!

சுவாரசியமான துணுக்குகள்:
  • அமுல் பேபி போல் மொழு மொழுவென்றிருக்கும் மகேஷ் பாபு வரிக்கு வரி பன்ச் வசனம் பேசும் போது ஆரம்பத்தில் சற்றே இடித்தாலும் போகப் போக அது பழகிப்போய் விடுகிறது! தெலுங்குப் படத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்று எண்ணிக் கொள்ள வேண்டியதுதான்!
  • தமிழ் படத்தில் மட்டுமல்ல தெலுங்கு படத்திலும் கூட செகண்ட் ஹாஃபில் ஹீரோயின் வந்தால் கண்டிப்பாக ஒரு டூயட் என்பது மாற்றக்கூடாத விதியாகும்!
  • படத்தில் வரும் பாதி வசனங்களும், பாடல் வரிகளும் ஹிந்தியிலேயே உள்ளன! பெரும்பாலான் தெலுங்குப் படங்களில் இப்படித்தான்! தமிழில் தான் காஷ்மீர் தீவிரவாதிக்கு கூட செந்தமிழ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது!
  • காதல் காட்சிகள் அப்படியே போக்கிரியிலிருந்து லைட்டாக டிங்கரிங், பெயிண்டிங் செய்திருக்கிறார்கள்! சண்டைக் காட்சிகளுக்கும் அதே லொகேஷன், அதே நடிகர்கள்! எங்கே தவறிப் போய் போக்கிரி படத்துக்கு மறுபடியும் வந்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது!
  • மகேஷ் பாபுவுக்கு படத்தில் உச்சா வருவதை சுண்டு விரல் தூக்கிக் காட்டும் ஸ்கூல் பையனைப் போல ஒரு மேனரிசம்! கேட்டால் மும்பையையே உச்சா போக வைக்கப் போகிறாராம்! முடியல...!!!
  • படத்தின் தீம் பாடலை மகேஷ் பாபுவும், பூரி ஜகன்னாத்தும் இணைந்து பாடியிருப்பதை படம் முடிந்த பின் டைட்டில் போடும் போது 'கொலவெறி' ஸ்டைலில் படம்பிடித்து காட்டுகிறார்கள்! DON'T MISS IT!
  • போக்கிரி (தெலுங்கு) போலவே இதிலும் காமெடி ட்ராக் இல்லை! அதனால் காஜல் அகர்வால் வரும் பாடல் காட்சிகள் தவிர மற்றவையெல்லாம் ஜெட் வேகத்தில் பறக்கின்றன! NO FAT IN THE MOVIE!
  • தமனின் பிண்ணனி இசை எண்பதுகளில் இளையராஜா போட்ட ஹீரோயிச இசையை ஞாபகப் படுத்துகிறது! 
  • தமன் காப்பியடிப்பதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் கெளபாய் பட (A FISTFUL OF DOLLARS) இசையை ரொமான்சுக்கு பயன்படுத்தியிருப்பது புதுமையிலும் புதுமை!


தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

3/6 - மூன்று தோட்டாக்கள்!

பயங்கரவாதியின் பன்ச்:

THE BUSINESSMAN - டைம்-பாஸுக்கு சிறந்த முதலீடு!

ட்ரைலர்:  

4 comments:

Kumaran said...

இதோடு இன்னிக்கு நாளாவது விமர்சனம் என்று நினைக்கிறேன்..அசத்துங்க..அசத்துங்க..என்னால வாரம் கூட ஒரு பதிவு பொடுறது குதிர கொம்பா இருக்கு.அந்த மந்திரத்தை சொல்லுங்க..பிளீஸ்.
விமர்சனம் நன்று..தெலுங்கு சினிமாவை போட்டு கலாய்ச்சிட்டீங்க.நன்றி.

ஹாலிவுட்ரசிகன் said...

உங்க விமர்சனத்தின் அளவு கச்சிதம். நம்மளப் போல ரொம்ப அறுக்காம கணக்கா சொல்லியிருக்கீங்க. நல்லாயிருக்கு.

More Entertainment said...

hii.. Nice Post

Thanks for sharing

Best Regarding.

More Entertainment

For latest stills videos visit ..

www.chicha.in

Anonymous said...

////படத்தில் வரும் பாதி வசனங்களும், பாடல் வரிகளும் ஹிந்தியிலேயே உள்ளன! பெரும்பாலான் தெலுங்குப் படங்களில் இப்படித்தான்! தமிழில் தான் காஷ்மீர் தீவிரவாதிக்கு கூட செந்தமிழ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது////

THERE IS REASON FOR THIS.... MOST OF PEOPLE IN ANDRA KNEW HINDI... NOT ONLY IN ANDRA, KERALA, KARNATAKA PEOPLE AS WELL....

BUT THAT IS NOT THE CASE IN TAMILNADU... WE DID NOT KNOW HINDI... FOR THE REASON OF UNDERSTANDING, DIRECTORS WANTED TO DO THIS...

REMEMBER HEY RAM MOVIE.. IN MOST OF REVIEWS, PEOPLE WRITTEN NO..NO... MADE A COMPLAINT THAT MOST OF DIALOGS THERE IN HINDI AND ENGLISH... IT IS OUR MISTAKE... NOT DIRECTORS MISTAKE...

Post a Comment